கல் வீசிய அதிமுக பிரமுகர் மீது பஸ்ஸை ஏற்றி படுகாயப்படுத்திய ஓட்டுனர்!
நெல்லை: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பையடுத்து, தென்காசி பஸ் மீது கல் வீசி தாக்கிய அதிமுக பிரமுகர் மீது சம்பந்தப்பட்டப் பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை ஏற்றி காயப் படுத்திய சம்பவத்தால் நெல்லை அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 18 வருடமாக நடைபெற்று வந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, அவர்களுக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப் பட்டதையடுத்து அவரது தமிழக முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. இதனால் ஆவேசமடைந்த அதிமுகவினர் தீர்ப்பு அறிவிக்கப் பட்டதிலிருந்து மாநிலத்தின் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் பதட்டமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், நெல்லையிலிருந்து தென்காசி நோக்கிச் சென்ற அரசு பேருந்தை அதே பகுதியைச் சேர்ந்த நாலாயிரம் என்ற அதிமுகத் தொண்டர் கல்வீசித் தாக்கியுள்ளார். ஆனபோதும், பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார் ஓட்டுநர்.

அப்போது எதிர்பாராதவிதமாக கல்வீசிய நாலாயிரம் மீது பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த நாலாயிரம், உடனடியாக சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக நெல்லைப் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications