நெல்லையே திணறுதே.. "திமுக புவனேஸ்வரி" ஞாபகமிருக்கா? கரெக்ட்டா அண்ணாமலை யாத்திரையில் "சம்பவம்'
நெல்லை: மேயர்களிலேயே அளவுக்கு அதிகமான பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தியவர் நெல்லை புவனேஸ்வரி.. இப்போதும் ஒரு பரபரப்பை கிளப்பி உள்ளார்.. என்னவாம்?
நெல்லையின் மாநகராட்சி அதிமுக மேயராக இருந்தவர் புவனேஸ்வரி, அதிமுகவில் இவர் இருந்தபோது கட்சிக்காகத் தீவிர களப்பணி ஆற்றியவர்... கடந்த 10 வருடங்களுக்கு முன்பு, திமுக நடந்தபோது, தன்னந்தனி நபராகவே பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று ஜெயிலுக்கு சென்றவர்.. இந்த ஒரு விஷயத்துக்காகவே, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்தையும் ஈர்த்தவர்.

அதுமட்டுமல்ல, அவரது தீவிரப் பற்று காரணமாகவே நெல்லை மாநகராட்சி மேயராகும் வாய்ப்பை அவருக்கு ஜெயலலிதா வழங்கினார்.
விஜிலா: அதாவது, 2011ல் நடந்த மேயர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் விஜிலா சத்தியானந்த். இவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால் அவருக்கு பதிலாக புதிய மேயராக அதிமுகவை சேர்ந்த புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவே தலைகீழாகிவிட்ட நிலையில், கட்சியே குழம்பி போய் காணப்பட்டது.. இப்படிப்பட்ட சூழலில், திமுக மீண்டும் அரியணை ஏறியது.
அப்போது, படக்கென அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்துவிட்டார் புவனேஸ்வரி.. இதைப்பற்றி ஒருமுறை செய்தியாளர்கள் புவனேஸ்வரியிடம் கேட்டார்கள். திமுகவை அப்படியெல்லாம் எதிர்த்துவிட்டு, திமுகவுக்கே வந்திருக்கிறீர்களே, என்ன காரணம்? என்று கேட்டார்கள்.
விளக்கம்: அதற்கு புவனேஸ்வரி, "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரையிலும் அதிமுகவில் சாதாரணத் தொண்டர்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது.. ஆனால், இப்போது அப்படியில்லையே.. இந்த நிமிஷம் வரை அதிமுகவில் என்ன நடக்கிறது என்பதே கட்சித் தொண்டர்களுக்கு புரியவில்லை. அதிமுகவில் பெண்களுக்கு துளியும் மரியாதை கிடையாது. அதனால்தான் மகளிரணி நிர்வாகிகள் பலரும் கட்சியிலிருந்து வெளியேறிவருகிறார்கள்.

தமிழகத்தில் சாதாரண மக்களுக்காக இயங்கும் இயக்கம் திமுக என்பதைப் புரிந்துகொண்டதால்தான், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தேன்...
முதல்வர் ஸ்டாலின் உழைப்புக்கு உதாரணமாகத் திகழ்கிறார். நாங்கள் கட்சியில் சேரும் நிகழ்ச்சியின்போதுதான் முதன்முறையாக அவரை நேரில் சந்தித்தேன். கட்சித் தொண்டர்களுக்கு, ஸ்டாலின் தரும் மரியாதையையெல்லாம் நேரில் பார்த்து நெகிழ்ந்து போனேன்..
புதிதாகக் கட்சிக்கு வந்த எங்களையெல்லாம் மகிழ்ச்சியாக வரவேற்றபோது, ஒரு தாயின் அன்பை அவரிடம் நேரில் பார்த்தேன்.. சரியான இடத்துக்கு வந்த மனநிறைவு, ஸ்டாலினை பார்த்ததுமே ஏற்பட்டது. முதல்வரின் ஆணைக்குக் கட்டுப்பட்டு கழகப் பணியாற்றுவேன் என்றார்..
அதிரும் நெல்லை: இவ்வளவு நீளமான விளக்கத்தை தந்திருந்த புவனேஸ்வரி, இன்று திடுதிப்பென்று, திமுகவில் இருந்து விலகி பாஜகவுக்கு "ஜம்ப்" ஆகிவிட்டார்.. பாளையங்கோட்டையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை சென்று கொண்டிருந்தார்.. அவரிடம் நேரடியாக சென்று, பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார்.. ஆக, 3 வருடங்களில், 3 கட்சிகளுக்கு மாறி, மொத்த பேரையும் அதிர வைத்துள்ளார் புவனேஸ்வரி...












Click it and Unblock the Notifications