விபத்து அதிகரிப்பு எதிரொலி.. நெல்லையில் இரு சக்கர ஆம்புலன்ஸ் அறிமுகம்
நெல்லையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் இரு சக்கர ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி: போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில் அவசர உதவித் தேவைப்படுபவர்களுக்கு உதவ இரு சக்கர ஆம்புலன்ஸ் வசதி நெல்லையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இரு சக்கர ஆம்புலன்ஸ் ஏற்கனவே சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் செயல்பாட்டில் உள்ளது. நெல்லை மாநகர பகுதிக்கும் இரு சக்கர ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் மற்றும் குற்றால சீசன் காலத்தில் இந்த ஆம்புலன்ஸ் சோதனை ஓட்டத்திற்கு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆம்புலன்ஸ் மாலை முதல் நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகே தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இதை கோபாலகிருஷ்ணன் என்ற மருத்துவ நிபுணர் ஒட்டி வருகிறார். வண்ணார்பேட்டையில் குறைந்தபட்சம் 5 கிமீ தூரத்திற்குள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் தேவைப்படும் இடங்களுக்கு இந்த ஆம்புலன்ஸ் விரைந்து சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் மருந்துகள் அடங்கிய பெட்டி இதில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆம்புலன்ஸ்சில் ஸ்பீக்கர் வசதி, சைரன் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. வழக்கமான 108 ஆம்புலன்ஸ்சுக்கு அவசரக் காலத்தில் தகவல் கொடுத்தால் அந்தப் பகுதிக்கு இந்த இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ்சை முதலில் அனுப்பி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications