நெல்லையில் ஷாக்.. 2வது கல்யாணம்.. துடித்த மாமனார்.. தடுத்த மருமகள். துடிதுடிக்க கொன்ற கொடுமை!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் இரண்டாவது திருமணத்தை தடுத்த மருமகளை, துடிக்க துடிக்க மாமானார் இரும்பு கம்பியால் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதையடுத்து மருமகளை கொன்ற மாமனாரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள இட்டேரி பகுதியை சேர்ந்த 55 வயதாகும் தங்கராஜ்க்கு தமிழரசன் என்ற மகன் உள்ளார்.இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். தமிழரசனி மனைவி முத்துமாரி (26) நெல்லையில் வசித்து வருகிறார்.

Nellai police arrested the father-in-law who killed the daughter-in-law

தங்கராஜ் மனைவி இறந்துவிட்டார். அவருக்கு 2-வது கல்யாணம் செய்யும் ஆசை வந்திருக்கிறது.இதற்காக தனது மருமகள் முத்துமாரியை வீட்டை விட்டு வெளியேறி , வேறு இடத்தில் குடியேறுமாறு வற்புறுத்தி வந்திருக்கிறார். ஆனால் இதற்கு முத்துமாரியே இரண்டாவது திருமணத்தை எதிர்த்ததுடன், வீட்டை விட்டு வெளியேறவும் மறுத்து வந்துள்ளார்.இதனால் தங்கராஜ் தனது மருமகள் முத்துமாரி மீது ஆத்திரத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி வீட்டில் இருந்த முத்துமாரியை தலையில் இரும்பு கம்பியால் தங்கராஜ் கொடூரமாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த முத்துமாரி ரத்த வெள்ளத்தில் விழுந்துள்ளார். இதை பார்த்த தங்கராஜ் அங்கிருந்து ஓடிவிட்டார். இதனிடையே முத்துமாரியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முத்துமாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் முத்துமாரியின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். முத்துமாரியின் மாமனார் தங்கராஜை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

Nellai police arrested the father-in-law who killed the daughter-in-law

இந்நிலையில் கொலை சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த தங்கராஜை நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மருமகளை, துடிக்க துடிக்க மாமானார் இரும்பு கம்பியால் அடித்தே கொலை செய்த சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+