கலப்பட ரேசன் அரிசி.. கடைக்காரர்களிடம் வாக்குவாதத்தில் குதித்த பெண்கள்!
நெல்லை: நெல்லை ரேசன் கடையில் வழங்கப்பட்ட இலவச அரிசியில் கல் மற்றும் நூல் கிடந்ததால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கடை ஊழியர்களிடம் தகராறு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரேசன் கடைகளில் பொதுமக்களின் நலன கருதி தமிழக அரசு சார்பில் அரிசி, கோதுமை, மண்எண்ணெய், சீனி உள்பட பல பொருட்கள மானிய விலையில் வழங்கப்படுகிறது. சமீபகாலமாக ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் பொருட்கள் சரியான எடையில் இருப்பதில்லை என புகார் தெரிவிக்கப்படுகிறது.

அரிசியை பொறுத்தவரை தேவையான அளவு சரியான மூட்டைகள் அனுப்பி வைக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சில கடைகளில் அரிசி கலப்படமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 100 மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டால் அதில் குறைந்தபட்சம் 5 மூட்டைகள் எதற்கும் லாயக்கு இல்லை என்று கூறப்படுகிறது.
அரிசி தரமில்லை என பொதுமக்கள் தொடர்நது புகார் தெரிவித்து வந்ததால் அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர். இந்த நிலையில் நெல்லை மாநகராடசி 14வது வார்டு பாளையங்கோடடை ஏடிஎம்எஸ் மஹால் அருகேயுள்ள டயோசீசன் கூட்டுறவு பண்டகசாலை ரேசன் கடையில் (எண் 01007) வழங்கப்பட்ட அரிசியில் கல், மண், புழுத்த கோதுமை, நூல் மற்றும் கழிவு பொருட்கள் கிடந்ததால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைநதனர்.
அனைவருக்கும் வழங்கப்பட்ட அரிசி இப்படி தரமில்லாமல் இருந்ததால் அப்பகுதி பெண்கள் ரேசன் ஊழியர்களிடம் வேறு அரிசி தருமாறு கேட்டனர். ஆனால் அவர்கள் தர மறு்த்ததல் தகராறு ஏற்பட்டது. பெண்கள் அனைவரும் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு தொற்றி கொண்டது.
பாஜக நகர் மண்டல தலைவர் மணிகண்டன் உள்பட பலர் போராட்டம் நடத்துவோம் என கூறியதால் கடை ஊழியர்கள் தரமற்ற ரேசன் அரிசியை வாங்கி கடையில் வைத்து கொண்டனர். இதையடுதது அனைவருக்கும் நாளை தரமான அரிசி வழங்கப்படும் என தெரிவித்ததால் பெண்கள் வசையுடன் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications