Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்னொரு நாகர்கோவில் காசியா நெல்லை சுந்தர்? தோண்ட தோண்ட பெண்களின் படங்கள்.. மன்மத லீலைகள்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: ரீல்ஸ் வீடியோ, அடிக்கடி வெளிநாடு சென்றது போன்று புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவது, ஆடம்பர சொகுசு காருடன் ஜாலி ரைடு போவது போல் போஸ் கொடுப்பது, அடிக்கடி ஜாலி டூர் செல்வது போன்று போஸ், விதவிதமான உடைகளுடன் போஸ் கொடுத்து பதிவிட்டு நெல்லை பெண்களை மயக்கிய மன்மத சுந்தர் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடியில் தொழிலதிபரான 33 வயது இளைஞர் ஒருவருக்கும், திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த 28 வயது பெண்ணிற்கும் கடந்த 2021ம் ஆண்டு கயத்தாரில் ஊரே மெச்சும்படி வெகு விமரிசையாக திருமணம் நடந்தது. இந்நிலையில் சில மாதங்களில் கர்ப்பமான அந்த பெண் பிரசவத்திற்காக கடந்த 2022ம் ஆண்டு தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆறு மாதங்கள் கழித்து குழந்தையுடன் வீடு திரும்பி உள்ளார் அந்த பெண்.

 Nellai Sundar is Another Nagercoil Kasi? Lots of pictures of women on cell phones

வீடு திரும்பியது முதலே மனைவியின் செயலில் மாற்றம் தெரிந்தது. அடிக்கடி செல்போனில் பேசுவதும் இன்ஸ்டாவில் சாட் செய்வதுமாக இருந்து வந்துள்ளார். குழந்தையின் அழுகையை கூட நிறுத்தாமல் சாட்டிங் செய்து வந்ததால் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தால் அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனைவிக்கு தெரியாமல் அவரது செல்போனை எடுத்து பார்த்த போது, ஒரு ஆணுடன் சாட்டிங் செய்வது அவருக்கு தெரிந்துள்ளது.

மாஸ் சுந்தர் 17 என் குறிப்பிட்ட ஐடியில் உள்ள நெல்லையைச் சேர்ந்த சுந்தர் என்பவருடன் இன்ஸ்டாவில் அடிக்கடி சாட் செய்தது தொழிலதிபருக்கு தெரியவந்தது. அந்த ஐடி யார் என்று தன் மனைவியிடம் அவர் கேட்டுள்ளார். இதனால் பதற்றம் அடைந்த மனைவி, அவருடன் சண்டை போட்டு, அம்மா வீட்டிற்கு போய்விட்டார். போனவர் சும்மா போகவில்லை. அங்கிருந்து விவாகரத்து கேட்டு கணவருக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தூத்துக்குடி தொழிலதிபர், தன் மனைவியுடன் பேசிக்கொண்டிருக்கும் மாஸ் சுந்தர் யார் என்பதை கண்டுபிடிக்க பெண் பெயரில் பேக் ஐடி ஒன்றை உருவாக்கினார். இதற்காக நந்தினி என்ற பெயரில் இன்ஸ்டாவில் போலியாக ஒரு கணக்கு தொடங்கினார். அந்த ஐடி மூலம் தன் மனைவியுடன் பேசி வந்த மாஸ் சுந்தருக்கு நட்பு அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட சுந்தர். உடனே பெண் என நினைத்து தூத்துக்குடி இளைஞருடன் பேச தொடங்கிவிட்டார்

தொடர்ந்து ஆசையுடன் நந்தினியின் பெயரில் இருந்த தூத்துக்குடி இளைஞரிடம் சாட்டிங்கில் பேசி வந்துள்ளார் மாஸ் சுந்தர்.. ஒரு கட்டத்தில் ஆடையில்லாமல் படங்களை எடுத்து அனுப்ப வேண்டும் என்று தூத்துக்குடி இளைஞருக்கு சுந்தர் கூறியிருக்கிறார்.. ஆனால் தூத்துக்குடி இளைஞர் படங்களை அனுப்பாமல் தயங்கி உள்ளார். மேலும் வீடியோ காலில் வருமாறு சுந்தர் வற்புறுத்தி உள்ளார். அதையும் தூத்துக்குடி இளைஞர் ஏற்காமல் சமாளித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் சுந்தர், தனது ஐடிக்கு மற்ற பெண்கள் அனுப்பி வைத்ததாக கூறி ஏராளமான பெண்களின் ஆபாச படங்களை அனுப்பி வைத்துள்ளார். அதில் தூத்துக்குடி தொழில் அதிபர், தனது மனைவி புகைப்படம் உள்பட பல்வேறு பெண்களின் புகைப்படங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தன் மனைவி போல் ஏராளமான பெண்களை சுந்தர் ஏமாற்றி இருப்பதை அறிந்த தூத்துக்குடி தொழில் அதிபர், திருநெல்வேலி காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக புகாரை ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்திய திருநெல்வேலி சைபர் கிரைம் போலீசார், சுந்தரை அதிரடியாக கைது செய்தனர்.

நாகர்கோவில் காசி பாணியில் சுந்தர், ரீல்ஸ் வீடியோ, அடிக்கடி வெளிநாடு சென்றது போன்று புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவது, ஆடம்பர சொகுசு காருடன் ஜாலி ரைடு போவது போல் போஸ் கொடுப்பது, அடிக்கடி ஜாலி டூர் செல்வது போன்று போஸ், விதவிதமான உடைகளுடன் போஸ் கொடுத்து பதிவிட்டு நெல்லை பெண்களை மயக்கியது விசாரணையில் தெரியவந்தது. சுந்தருக்கு எந்த வேலையும் இல்லை என்பதும் ஸ்மார்ட்போனை வைத்து தான் இப்படி பெண்களை ஏமாற்றி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்ததும். சுந்தரின் செல்போனில் மேலும் பல பெண்களின் புகைப்படங்கள் ஆபாசமாக இருப்பதை கண்டு அதிர்ந்து போன போலீசார் எத்தனை பெண்களை ஏமாற்றினார் என்பதை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+