நெல்லை, தூத்துக்குடி புதிய மேயர்களாக புவனேஸ்வரி, அந்தோணி கிரேஸ் பதவி ஏற்பு

தமிழகத்தல் காலியாக இருந்த நெல்லை, தூத்துக்குடி, கோவை மேயர் பதவி உள்பட பல பதவிகளுக்கு கடந்த வாரம் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடந்தது. அதில் நெல்லை மேயராக புவனேஸ்வரியும், தூத்துக்குடி மேயராக அந்தோணி கிரேஸியும் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற புவனேஸ்வரியும், அந்தோணி கிரேசும் புதிய மேயராக நேற்று பொறுப்பேற்று கொண்டனர். இவர்களுக்கு தங்க சங்கிலி, செங்கோல் வழங்கப்பட்டது. நெல்லை மேயர் புவனேஸ்வரிக்கு கமிஷனர் லட்சுமி பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் அவர் பதவி பிரமாணம் எடுத்து கொண்டார்.
இதில் நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன், வீட்டு வசதி வாரிய தலைவர் முருகையா பாண்டியன், எம்பிக்கள் முத்துகருப்பன், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநகராட்சி அதிகாரிகள் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இது போல் தூத்துக்குடி மேயராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தோணி கிரேஸி பதவியேற்கும் நிகழ்ச்சி மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. அமைச்சர் சணமுகநாதன் தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் மதுமதி மேயருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அவரை தொடர்ந்து 37வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர் மாரிமுத்துவுக்கும் அவர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து கமிஷனர் மதுமதி மேயரை அழைத்து கொண்டு மேயருக்கு உரிய அங்கி, செங்கோல் ஆகியவற்றை வழங்கி அணிவித்து மேயரின் இருக்கைக்கு அழைத்து வந்து அமர வைத்தார்.
பின்னர் மேயர் அந்தோணி கிரேஸ் ஏற்புரை வழங்கினார். இதில் எம்பிக்கள் சசிகலா புஷ்பா, நட்டர்ஜி, எம்எல்ஏக்கள் செல்லபாண்டியன், கடம்பூர் ராஜூ, துணை மேயர் சேவியர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications