மங்கள்யான் வெற்றியில் திருநெல்வேலி விஞ்ஞானி
திருநெல்வேலி: செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கல திட்ட இயக்குனராக பணியாற்றிய நெல்லையைச் சேர்ந்த விஞ்ஞானி அருணனுக்கு பாராட்டு குவிகிறது.
இந்திய விண்வெளி துறையின் கனவு திட்டமான செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் திட்டம் நேற்று முன்தினம் நனவாகியது. பிஎஸ்எல்வி சி 25 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட மங்கள்யான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

டிசம்பர் 1ந் தேதி அது தனது செவ்வாய் கிரக பயணத்தை தொடங்க இருக்கிறது. 300 நாட்கள் தொடர்ந்து பயணம் செய்து செவ்வாய் கிரக சுற்று வட்ட பாதையை அது அடையும். இந்த திட்டம் வெற்றி பெறுவதன் மூலம் சர்வதேச அளவில் இந்தியாவி்ன் புகழ் அதிகரித்துள்ளது.
இந்த வியத்தகு சாதனை படைத்த மங்கள்யான் செயற்கைகோளின் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் சுப்பையா அருணன். இவர் நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த கோதைசேரி என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சுப்பையா கூடங்குளம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர்.
அருணன் ஆரம்ப கல்வியை திருக்குறுங்குடி அரசு பள்ளியிலும், உயர் கல்வியை பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியிலும் படித்தவர். கோவையில் பி.இ மெக்கானி்க்கல் இன்ஜினியரிங்கில் ஹானர் பட்டம் பெற்றார்.
இஸ்ரோ மையத்தில் 1984ம் பணியில் சேர்ந்து பின்னர் பதவி உயர்வு பெற்று பெங்களூரு இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார். மங்கள்யாண் விண்கலத்தை உருவாக்கியது முதல் அதை வெற்றிகரமாக இயங்க வேண்டும் என்ற சிந்தனையுடன் அருணன் 24 மணி நேரமும் செயல்பட்டு வந்துள்ளார் என அவரது இளைய சகோதரர் தெரிவித்துள்ளார்.
அருணனின் சாதனையை பாராட்டி வள்ளியூர் பகுதியில் ஃபேஸ்புக் நண்பர்கள் சார்பில் அவருக்கு பாராட்டு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை தவிர பல்வேறு தரப்பினரிடமிருந்தும் அருணனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவரால் நெல்லை மண்ணுக்கு பெருமை ஏற்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications