காதலனைக் கட்டிப் போட்டு காதலியை பலாத்காரம் செய்த கும்பல்
நெல்லை: நெல்லையில் காதலனைக் கட்டிப்போட்டிவிட்டு, இளம்பெண்ணை ஒரு மர்ம கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி, திட்டுவிளைய சேர்ந்தவர் அந்த இளைஞர். அவர் ஒரு கணினி பொறியியல் வல்லுநர் என்பதால் நெல்லையின் பல்வேறு பகுதிகளில் சென்று கணினி வியாபரத்தில் ஈடுபட்டு வந்தார்.
அவரும், நாகர்கோவிலைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது காதலியுடன் நாங்குநேரி வந்த இவர்கள் மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து சென்ற மூன்று மர்ம நபர்கள் நாங்குநேரி, களக்காடு சாலையில் ஜீயர்குளம் அருகே சென்றபோது அவர்களை வழிமறித்தனர்.
காதலனைக் கட்டிப் போட்டுவிட்டு, அந்த இளம்பெண்ணை தனியிடத்துக்கு தூக்கிச் சென்ற 3 பேரும் பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்களிடம் இருந்த லேப்டாப், செல்போன்கள் ஆகியவற்றையும் பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். நெல்லையில் இதுபோன்ற சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. விரைவில் காவல்துறை அம்மர்மநபர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications