நலம் விசாரிக்க மட்டுமே விஜயகாந்தைச் சந்தித்தேன் - நெப்போலியன்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகா்த்தும், நானும், கட்சிக்கு அப்பாற்பட்டு நண்பர்கள். எனவே நலம் விசாரிக்க மட்டுமே விஜயகாந்த்தைச் சந்தித்தேன் என்று நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்து நலம் விசாரித்தார் முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான நெப்போலியன். உடல் சுகவீனமடைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சைக்குப் பிறகு இப்போது தேறி வருகிறார். கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்துள்ளார்.

விஜயகாந்தை கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரமுகர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். திமுக பிரமுகர் ஜெ அன்பழகன் சில தினங்களுக்கு முன் விஜயகாந்தைச் சந்தித்தது நினைவிருக்கலாம்.
நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன், நேற்று முன்தினம்தான் அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்தார். இன்று காலை அவர் விஜயகாந்தைச் சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து நெப்போலியன் நம்மிடம் பேசுகையில், "கட்சிக்கு அப்பாற்பட்ட நண்பர்கள் நானும் விஜயகாந்தும். அவருக்கு உடல் நலக் குறைவு என்று கேள்விப்பட்டு இன்று சந்திக்கப் போனேன். இருவரும் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். இது நலம் விசாரிப்புக்கான சந்திப்பு மட்டும்தான்," என்றார்.
கடந்த மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சமூகநீதி மற்றும் ஆற்றல் மேம்பாட்டு துறையின் இணை அமைச்சராக நெப்போலியன் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications