கணவனின் கள்ள உறவு.. பிரிக்கப்பட்ட குழந்தை.. மனைவி தற்கொலை.. கடிதத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்!

சென்னை நெசப்பாக்கத்தில் கணவனின் கள்ளக்காதலால மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெசப்பாக்கத்தில் கணவனின் கள்ளக்காதலால மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த புஷ்பலதா என்பவரின் கணவர் ஜான்பால். ஜான்பால் அங்குள்ள பூங்காவில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பூங்காவில் பணிபுரியும் மற்றொரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. கள்ள உறவை கைவிடக்கோரி பல முறை கெஞ்சியுள்ளார் புஷ்பலதா.

[ மருத்துவத்துக்கான நோபல் அறிவிப்பு.. 2 பேர் பெறுகிறார்கள்! ]

மனைவி தற்கொலை

மனைவி தற்கொலை

ஆனால் கள்ளக்காதலை கைவிட மறுத்த ஜான்பால், உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கிவிட்டது, நீ என்ன சொல்வது என எகாத்தாளமாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த புஷ்பலதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உருக்கமான கடிதம்

உருக்கமான கடிதம்

இந்நிலையில் புஷ்பலதா, தற்கொலைக்கு முன்னர் எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளார். அதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. புஷ்பலதா தனது கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, என் கணவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்புள்ளது. எனது கணவர் ஜான்பால் வெளியில் செல்லும் போது எங்களது 1½ வயது பெண் குழந்தையை வெளியில் அழைத்து சென்று கள்ளக் காதலியிடம் கொடுத்து விடுகிறார்.

குழந்தையை பார்க்க விடாமல்

குழந்தையை பார்க்க விடாமல்

மாலையில் வீடு திரும்பும் போது அழைத்து வருகிறார். இதனால் நான் தனிமையில் இருந்தேன். குழந்தையை பார்க்க விடாமல் எனது கணவர் தடுக்கிறார். இது எனக்கு வேதனையை தருகிறது.

உயிரை விடுகிறேன்

உயிரை விடுகிறேன்

குழந்தையை பறிக்கும் கணவர், என்னிடமும் பிரியமாக இல்லை. எனது குழந்தையை என்னிடம் இருந்து பிரித்துவிடுகிறார். எனவே நான் உயிரை விடுகிறேன். என்சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் மரணத்துக்கு பின்னர் என் கணவர் சந்தோ‌ஷமாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் எழுதப்பட்டு இருந்தது.

4 ஆண்டுக்கு முன்பே பழக்கம்

4 ஆண்டுக்கு முன்பே பழக்கம்

இது தொடர்பாக புஷ்பலதாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில், மகளின் கணவர் ஜான்பால் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் 4 ஆண்டுக்கு முன்பே பழக்கம் இருந்தது. இதனை மறைத்து எனது மகளை ஏமாற்றி காதலித்து திருமணம் செய்து உள்ளார்.

கணவரே காரணம்

கணவரே காரணம்

பலமுறை எனது மகளை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறார். என் மகளின் சாவுக்கு கணவர் ஜான்பாலே காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+