For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனிமே மும்பை இந்தியன்ஸ்க்கு சப்போர்ட் பண்றவனும் பாகிஸ்தான் ஆள்தானாம்

மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடைவிதித்ததைக் கண்டித்து தென்னிந்திய மாநிலங்கள் தனி திராவிட நாடு கேட்டு முழக்கமிட தொடங்கியுள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசு மாட்டிறைச்சிகளை விற்க தடைவிதித்துள்ளது. நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மிருகவதைக்கு எதிராக மத்திய அரசு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தென் மாநிலங்கள் தனிநாடு முழக்கத்தை கையில் எடுத்துள்ளனர். இதற்காக திராவிட நாடு என்ற கோஷத்தையும் அவர்கள் டிவிட்டரில் டிரென்டாக்கி வருகின்றனர்.

ஒன்றுதானே..

இனிமே மும்பை இந்தியன்ஸ்க்கு சப்போர்ட் பண்றவனும் பாகிஸ்தானுக்கு சப்போர்ட் பண்றவனும் ஒண்ணுதானே என்கிறார் இந்த நெட்டிசன்...

கலைஞருக்கு பரிசு?

கலைஞரின் வைரவிழா நேரத்தில் திராவிட நாடு கோரிக்கை... இதைவிட கலைஞருக்கு சிறந்த பிறந்தநாள் பரிசோ,வாழ்த்துகளோ இல்லை...என்கிறார் இந்த நெட்டிசன்..

தண்ணீர் வந்துடும்

திராவிட நாடு வருமான்னு தெரியல வந்துச்சுன்னா காவிரி முல்லைபெரியாறில் இருந்து தண்ணீர் வந்துருமுன்னு நினைக்கிறேன் என்கிறார் இந்த நெட்டிசன்ன..

வேலை கிடைக்கும்

திராவிட நாடா பிரிக்கறதுக்கு பதிலா மாவட்ட வாரியாவே பிரிச்சுவிட்றனும் அப்பதான் பியூட்சர்ல அத்தனை பேருக்கும் அரசாங்க(ராணுவ) வேலை கிடைக்கும்.. என்கிறார் இந்த நெட்டிசன்

கம்யூனிஸ்டின் கனவு

திராவிட நாடு என்பது வேலையில்லாத கம்யூனிஸ்ட் கட்சியின் கனவு. தென்னிந்தியர்களை திட்டாதீர்கள்.. கன்னடர்கள் எப்போதும் இந்தியாவைதான் விரும்புகிறோம் என்கிறார் இந்த நெட்டிசன்..

வளமும் நலமும்...

திராவிட நாடு சாத்தியமா என்பது தெரியவில்லை. ஆனால் தனி நாடாக பிரிக்கப்பட்டால் அந்த நாடுதான் இந்த உலகத்திலேயே வளமும் நலமும் பெற்ற நாடாக இருக்கும் என்கிறார் இந்த நெட்டிசன்..

எதிர்கால விருப்பம்

ஒருங்கிணைக்கப்பட்ட தென்னிந்தியா என்பது தமிழ், மலையாளம், கன்னடா, தெலுங்கு பேசும் மக்களின் எதிர்கால விருப்பம் ஆகும்.. என்கிறார் இந்த வலைஞர்..

மாட்டிறைச்சிக்கு எதிராக குரல்..

கேரளாவில் இருந்து பினராயி விஜயனும் தமிழ்நாட்டில் இருந்து ஸ்டாலினும் தான் மாட்டிறைச்சிக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர் என்கிறார் இந்த நெட்டிசன்..

English summary
Netizens making Dravida nadu as trending on twitter. Kerala people protest against ban beef. They have started to Demand south india country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X