வார்த்தையை விட்ட மனுஷ்யபுத்திரன்.. ‘பழசு மறந்துடுச்சா’ பதிவை நீக்கியும் ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்!
சென்னை : அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து மாற்றியதற்கு எதிராக சமூக வலைதளங்களில் திமுகவினர் உள்ளிட்ட பலரும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இதற்கு திமுக ஐடி விங் ஆலோசகர் மனுஷ்யபுத்திரன் ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு பின்னர் நீக்கினார்.
திமுக அரசுக்கு அறிவுரை தருபவர்களை கிண்டல் செய்யும் தொனியில் மனுஷ்யபுத்திரன் பதிவிட்டிருந்த நிலையில், திமுகவில் இணைவதற்கு முன்பாக, மனுஷ்யபுத்திரன், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அறிவுரை கூறியதை பகிர்ந்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

முக்கியத்துவம் வாய்ந்த துறை : முன்னாள் முதல்வர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டோர் தங்கள் வசம் வைத்திருந்த நிதித்துறையை, முதல் முறை அமைச்சராகும் போதே பெற்றார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். நிதித்துறையில் பிடிஆருக்கு இருக்கும் சர்வதேச அனுபவம், அவரது கல்வி பின்புலம் ஆகியவற்றைக் கொண்டே பிடிஆரை அந்தப் பொறுப்பிற்கு டிக் அடித்தார் ஸ்டாலின்.
கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் தான் திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. எனவே செலவுகளை கடுமையாக குறைத்து, வருமானத்தை உயர்த்த பிடிஆர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதற்கு முதல்வர் ஸ்டாலினும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினார்.

கேபினட் அதிரடி மாற்றம் : இந்நிலையில் தான் நேற்று அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. புதிதாக டிஆர்பி ராஜாவை தொழில்துறை அமைச்சராக்கிய ஸ்டாலின், மேலும் 4 பேரின் இலாகாக்களை மாற்றினார். நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு பந்தாடப்பட்டுள்ளார்.
நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மாற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், அண்மையில் வெளியான ஆடியோ விவகாரமே பிரதானமாக இருக்கும் என விமர்சிக்கப்படுகிறது. பிடிஆர் இலாகா மாற்றத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும், திமுகவினரும் பொங்கி எழுந்தனர்.

மனுஷ்யபுத்திரன் போட்ட பதிவு : பாஜகவினர் மகிழும்படியான இந்த நடவடிக்கையை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டிருக்கக்கூடாது என பலரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், திமுக ஐடி விங் ஆலோசகரும், செய்தித் தொடர்பாளருமான மனுஷ்யபுத்திரன், திமுக எப்படி ஆட்சி நடத்தவேண்டும் என வண்டி வண்டியாக அறிவுரையை அள்ளி விடுகிறார்கள் என விமர்சித்தார்.
நாங்கள் எப்படி கட்சி நடத்தவேண்டும், யாரை அமைச்சராக்க வேண்டும் என்றெல்லாம் இவ்வளவு பேருக்கு இவ்வளவு ஐடியா இருப்பதை நினைத்தல் திகைப்பாக இருக்கிறது. தங்கள் குடும்பத்தைக் கூட ஒழுங்காக நடத்த முடியாதவர்கள் எல்லாம் திமுக எப்படி ஆட்சி நடத்தவேண்டும் என்று அறிவுரை சொல்கிறார்கள் என ஃபேஸ்புக்கில் பதிவிட்டார் மனுஷ்யபுத்திரன்.
பதிவை நீக்கிய மனுஷ் : மனுஷ்யபுத்திரனின் இந்தப் பதிவுக்கு கடுமையான எதிர்வினைகள் நிகழ்ந்தன. "நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் சமூக ஊடகங்களில் திமுகவுக்காக உழைத்தபோது இனித்தது, ஆனால் இப்போது பதவியில் உட்காந்ததும் நீங்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டினால் கசக்கிறதா?" என நெட்டிசன்கள் கடுமையாகச் சாடினர்.

இதைத்தொடர்ந்து, மனுஷ்யபுத்திரன் தனது சர்ச்சைக்குரிய பதிவை நீக்கினார். ஆனாலும், அதோடு நிற்காத நெட்டிசன்கள் கடந்த 2011ஆம் ஆண்டுவாக்கில் திமுகவை விமர்சித்து மனுஷ்யபுத்திரன் வெளியிட்ட பதிவுகளைக் கிளறி எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.
பழைய சம்பவம் : மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அறிவுரை கூறும் வகையில் மனுஷ்யபுத்திரன் எழுதிய பதிவுகளைக் குறிப்பிட்டு, "இன்று அமைச்சரவை அமைக்க அரசுக்கு யாரும் சொல்லித்தர வேண்டாம் எனச் சொல்லும் மனுஷ்யபுத்திரன், அப்போது கருணாநிதிக்கே அரசியல் பாடம் எடுத்திருக்கிறார்" என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
அமைச்சரவை மாற்றம் விவகாரத்தில் சமூக வலைதளங்களில் எழுந்த கருத்துகளுக்கு பதில் சொல்லப்போய், மனுஷ்யபுத்திரனின் கடந்தகால பதிவுகள் கிளறப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications