ஆயாவையே மாற்ற முடியாதவர்களா ஆட்சி முறையை மாற்றுவார்கள்.. நெட்டிசன்கள் கிண்டல்
சென்னை: சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கும் நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கடுமையான விளம்பர கோதாவில் குதித்துள்ளன.
"வானத்தில பறக்குறவங்களுக்கு, நம்மளுடைய பிரச்சினை எப்படிங்க தெரியும்? மக்கள பத்தியே கவலப்படாத ஆட்சி இனி எதுக்குங்க? போதும்மா..." இந்த டயலாக்கை உணர்ச்சி பொங்க கையை ஆட்டியபடியே, ஒரு வயதான மூதாட்டி சொல்வது போன்ற திமுக விளம்பரங்களை அடிக்கடி நீங்கள் டிவியில் பார்த்திருக்க கூடும்.
ஆனால், இதே பெண்மணிதான், அதிமுக விளம்பரத்தில் ஆட்சியை புகழ்ந்து நடித்துள்ளார் என்பதுதான் இதில் சிறப்பு. கோயில்களில் செயல்படுத்தப்படும் அன்னதானம் திட்டத்தால் பலன் அடைந்த பெண்மணி போல நடித்து அதிமுக அரசை வாழ்த்தும் விளம்பரம் ஒன்றிலும் இதே பெண்மணிதான் நடித்துள்ளார்.

சோறு போட்ட ஆத்தா
"பெத்த புள்ள சோறுபோடல.. எனக்கு சோறுபோட்ட தெய்வம் புரட்சி தலைவி அம்மாதான்.." என்று மிகவும் உணர்ச்சிமிகுதியில் பேசுவதை போல அதிமுக விளம்பரம் அமைந்துள்ளது.

கஸ்தூரி பாட்டி
இவ்விரு விளம்பரங்களிலும் நடித்துள்ளவர் பெயர் கஸ்தூரி. பல திரைப்படங்களில் உணர்ச்சிகரமாக நடிக்க வேண்டிய காட்சிகளில் கஸ்தூரி பாட்டி பின்னி பெடலெடுத்துள்ளார்.

மக்கள் அதிர்ச்சி
திமுக-அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே ஒரே துணை நடிகையை வைத்து விளம்பர படம் எடுத்துள்ள செய்தி வெளியானதும், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அத்தனையும் நடிப்பா கோப்பால்
பொதுமக்களில் பலரும் விளம்பரங்களில் நடிப்பவர்கள் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பலனடைந்தவர்கள் என நினைத்திருந்தனர். ஆனால், தொழில்முறை நடிகர், நடிகைகளை வைத்துதான் இவ்விரு கட்சிகளும் விளம்பரங்களை வெளியிட்டு வந்துள்ளது ஆதாரப்பூர்வமாக அம்பலமாகிவிட்டது.

இவங்க இப்படித்தான்
அதிமுகவுக்கு மாற்று திமுகதான் என அக்கட்சி விளம்பரம் செய்து வருகிறது. இதேபோலத்தான், 2011 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு மாற்று அதிமுக என இக்கட்சி விளம்பரம் செய்தது. ஆனால், இவ்விரு கட்சிகளுமே பெயர் மட்டுமே மாறுபட்டவை. செயல்கள் அனைத்தும் ஒன்றுதான் என்பது மூன்றாவது அணியினர் குற்றச்சாட்டு. இக்குற்றச்சாட்டை இந்த விளம்பரம் உறுதி செய்துள்ளது.
|
ஆயாவ மாற்ற முடியாதவங்க ஆட்சிய மாற்றுவாங்களா?
ஒரு பாட்டியையே மாற்ற முடியாதவர்களா, ஆட்சி மாற்றத்தை தரப்போகிறார்கள் என்று இணையதளங்களில் கேலி, கிண்டல் செய்யப்படுகிறது. இரு கட்சிகளும் ஒரே சிந்தனை உள்ளவர்கள்தான் என்பது விளம்பர ஏஜென்டுகள், நடிகைகள் உள்ளிட்ட எல்லாவற்றிலுமே பிரதிபலித்து விட்டது என்று ஆக்ரோஷமாகவும் கருத்துக்களை கூறுகிறார்கள் நெட்டிசன்கள்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications