இன்டி(அடிங்)கோ: நம்பி வாங்க, அடிவாங்கிட்டு போங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர்கள் பயணி ஒருவரை தாக்கியதை வைத்து நெட்டிசன்ஸ் அந்த நிறுவனத்தை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

டெல்லி விமான நிலையத்தில் இன்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர்கள் பயணி ஒருவரை கீழே தள்ளி கழுத்தை நெரித்தனர். அந்த சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இன்டிகோ நிறுவனத்தை நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்டிகோ

ஏர்லைன்ஸ்களின் டேக்லைன்:

இன்டிகோ- வாடிக்கையாளர்களை அடிப்போம்
ஜெட் ஏர்வேஸ்: வாடிக்கையாளர்களை அல்ல போட்டியை முறியடிப்போம்
ஏர் இந்தியா - வாடிக்கையாளர்களை அடிக்க மாட்டோம். எம்.பி.க்கள் தான் எங்களை அடிப்பார்கள்
கோ ஏர் - எங்களுக்கு வாடிக்கையாளர்களே இல்லை
ஏர் விஸ்டாரா - எங்களிடம் விமானங்களே இல்லை

அடிங்கோ

கிளாசிக். இன்டிகோவின் பெயர் அடிங்கோ என்று மாற்றப்பட்டது. அடிங்கோ என்றால் அடி என அர்த்தம்

தாக்குதல்

இதை தான் இன்டிகோ ஏர்லைன் ஊழியர்கள் பயணிக்கு செய்துள்ளார்கள்

சண்டை

கணவருடன் சண்டையா. அவருக்கு எங்கள் விமானத்தில் ஏன் டிக்கெட் புக் செய்யக் கூடாது? இப்படிக்கு இன்டிகோ

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens are trolling Indigo airlines after its crew attacked a passenger in the Delhi IGI airport.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற