ஒன்னாம் நம்பரில் ஓயாமல் “அம்மா, அம்மா” என்று ஒப்பாரி வைக்கும் பெயர் தெரியாத சேனல்!
புதுக்கோட்டை: தமிழக முதல்வராக மூன்றாண்டுகளாக பதவி வகித்த ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரது மூன்றாண்டு சாதனைகளை பட்டியலிடும் வகையிலும், அவரது புகழ்பாடும் வகையிலும் புதியதாக ஒரு சேனல் முளைத்துள்ளது கேபிளில்.
இந்த சேனலைப் பார்த்தால் ஜெயலலிதாவே கண்டிப்பாக மண்டை குழம்பி போய்விடுவார் என்பது நிச்சயம். புதுக்கோட்டையில்தான் இந்த சேனல் தெரிகிறது. மற்ற பகுதிகளிலும் தெரிகிறதா என்று தெரியவில்லை.

24 மணி நேரமும் “ஜால்ரா”:
லோக்கல் கேபிளின் முதலாவது எண்ணில் ஒளிப்பரப்பாகும் இந்த தொடர் விளம்பர சேனலில் 24 மணிநேரமும் கொடிக்கட்டி பறப்பது அம்மா "புகழ்" விளம்பரங்களும், ஒளி,ஒலி நாடாக்களும்தான்.

ரீல் அந்து போயிரும்டா டேய்:
ரீலே தேய்ந்து போய்விடும் அளவிற்கு இதில் ஆளாளுக்கு அம்மா புகழ் பாடுகின்றார்கள். பெற்ற தாயைப் பற்றிக் கூட இந்த அளவிற்கு பாடியிருப்பார்களா தெரியவில்லை.

விளக்கமோ விளக்கம்:
தமிழ்நாடு திரைப்படக் கழகத்தால் எடுக்கப்பட்ட காமெடி நடிகர் விவேக் நடித்த அம்மா புகழ் பாடும் விளம்பரம் முதல், பாமர மக்களும் திரையில் தோன்றி ஜெயலலிதாவின் ஆட்சியின் சாதனைகளை விலாவரியாக விவரித்து பார்ப்பவர்களை பல்டி அடிக்க வைக்கிறார்கள்.

ஆண்டவா ஏன் இந்த சோதனை?:
பெயர் தெரியாத இச்சேனல் எங்கெல்லாம் தெரிகின்றது என்பது தெரியவில்லை. ஆனால், ஒரு அரைமணி நேரம் பார்த்தால் எங்கே நாமும் அம்மா புகழ் பாடத் துவங்கி விடுவோமோ என்று தோன்றுகின்றது. ஸப்ப்பா முடியலை!!
இதுக்காவது சீக்கிரமே ஜெயலலிதா சிறையை விட்டு வெளியே வர வேண்டும் போல.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications