பாலியல் புகார்: அரவிந்தர் ஆசிரமத்தில் விசாரணையை தொடங்கிய புதிய நீதிபதி குழு

புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமம் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் புகார் உள்பட பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. இது குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தினார். அவர் விசாரணை நடத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரம நிர்வாகிகள் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து அரவிந்தர் ஆசிரமம் மீது கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ராமன் தலைமையில் விசாரணை கமிஷனை உயர்நீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டது. அந்த விசாரணை குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை வந்தனர். ஆசிரம நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் ஓய்வு பெற்ற நீதிபதி ராமன் தன் உடல்நிலை காரணமாக இந்த விசாரணை குழுவிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து விசாரணை குழுவுக்கு கேரளாவை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி விசுவநாத அய்யர் புதிதாக நியமிக்கப்பட்டார். இன்று அவரது தலைமையில் விசாரணை குழுவினர் புதுவை வந்தார்கள்.
புதுவை தலைமை செயலகத்தில் உள்ள பயிற்சி கூடத்தில் காலை 10.30 மணிக்கு விசாரணை தொடங்கியது. அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ. மற்றும் ஆசிரம ஆதரவாளர்கள் 30 பேர், ஆசிரம எதிர்ப்பாளர்கள் 30 பேர் ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை குழுவினர் விசாரணை நடத்தினார்கள். அரைமணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. பின்னர் டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று விசுவநாத அய்யர் தெரிவித்தார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications