புதிய வருமான வரி ஆப்ஷனால் நமக்கு கிடைக்கப்போவது என்ன? ஆஹா..ஒரே வீடியோ.. எல்லாம் சொல்லிடுச்சே
சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், ஆப்ஷனலாக வழங்கியுள்ள தனி நபர் வருமான வரி விகிதம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வருமான வரி விகிதங்களை குறைப்பதாக நிர்மலா அறிவித்திருந்தாலும், ஏற்கனவே பெறக்கூடிய முதலீட்டு வரிக் கழிவு சலுகைகளை மறுப்போருக்கு மட்டுமே இந்த புதிய வருமான வரி விகிதங்கள் பொருந்தும் என்று ஒரு செக் வைத்துவிட்டார் நிதியமைச்சர்.

நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு வெளியானபோது மாத சம்பளதாரர்கள் ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால், பின்னாடியே இப்படி ஒரு ஆப்ஷனல் என்ற வார்த்தையை அவர் சேர்த்ததுமே புஸ் என்று போய்விட்டது.
நமக்கு எந்த வருமான வரி ஆப்ஷன் சரியாக இருக்கும் என்ற சந்தேகத்துடன், கால்குலேட்டரும் கையுமாக நமது மக்கள் அலைகிறார்கள். அடடே புது அறிவிப்பில் லாபம் வருதே என யோசிக்கும்போதே, வேண்டாம்ப்பா, 80சியில் முழு வரி கழிவையும் பெற்றுவிட்டால், பழசுதான் நமக்கு லாபமா இருக்கும் என மனசாட்சி சொல்ல ஆரம்பித்துவிடும்.
New income tax Regime 😜😜 pic.twitter.com/ohhtDFNHva
— Shruti Ahuja (@shrutiahuja110) February 1, 2020
ஒரு திரைப்படத்தில் எஸ்.ஏ.சூர்யா, "இருக்கு..ஆனா இல்ல.." என்று சொல்லி மனநல மருத்துவரான ஊர்வசியை குழப்பி எடுத்துவிடுவார். அப்படித்தான், இப்போது நிர்மலா பட்ஜெட்டும் இருக்கிறது. நமக்கு ஏதாவது நன்மை இருக்குற மாதிரியே இருக்கு, ஆனால் இல்லைங்கிற மாதிரியும் இருக்கு என மாத சம்பளதாரர்கள் விழிபிதுங்கியுள்ளனர்.
இந்த நிலையில்தான், ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அதில் ஒரு நாய்க்கு கண்ணாடி மேஜைக்கு அந்த பக்கம் நின்றபடி பிஸ்கெட் போடுவதை போலவும், பிஸ்கட் தன்னை நோக்கி வருகிறது என்று அந்த செல்லப் பிராணி யோசிப்பதை போலவும் உள்ளது. இப்படித்தான் கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியாத நிலையில் மிடில் கிளாஸ் இருக்கிறது என்று சொல்கிறது இந்த வைரல் வீடியோ.
என்ன பாஸ், உங்களுக்காவது புரிந்ததா? எந்த ஆப்ஷன் நல்லது என்று?
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications