குக்கருக்கு மகிழ்ச்சி... தேர்தல் ஆணையம் ஒதுக்கும் பெயரில் புதிய கட்சி- டிடிவி தினகரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கி உத்தரவு- வீடியோ

  சென்னை: தேர்தல் ஆணையம் ஒதுக்கும் பெயரில் புதிய கட்சி தொடங்குவேன் என்றும், நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

  3 வாரத்துக்குள் கட்சிப் பெயர், சின்னம் ஒதுக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று டெல்லி ஹைகோர்ட் உத்தவிட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

  தேர்தல் ஆணையம் ஒதுக்கும் பெயரில் புதிய கட்சி தொடங்குவேன் என்றும், நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். இரட்டை இலைக்கு உரிமை கோரும் வழக்கை தொடர்ந்து நடத்துவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  அண்ணாவின் உருவம்

  அண்ணாவின் உருவம்

  கட்சிக்கு கறுப்பு வெள்ளை சிவப்பு நிறம் கொண்ட கொடியை பயன்படுத்த தடை விதிக்க முடியாது என்றும் டிடிவு தினகரன் கூறியுள்ளார். கறுப்பு சிவப்பு வெள்ளையில் அண்ணாவின் உருவம் கொண்ட கட்சிக்கொடிதான் அதிமுகவிற்கு உரிமையானது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

  இரட்டை இலையை மீட்பேன்

  இரட்டை இலையை மீட்பேன்

  குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என்றுதான் நான் கோரியிருந்தேன் நீதிமன்றத்தின் உத்தரவு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. புதிய சின்னத்துடன் புதிய பெயரில் கட்சி தொடங்கினாலும் தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை தொடர்பான வழக்கை தொடருவேன். சின்னத்தை மீட்பேன் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

  கட்சிக்கு புதிய பெயர்

  கட்சிக்கு புதிய பெயர்

  ஆர்கே நகர் தொகுதி தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கிய குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தனக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அதே போல் தன் அணியின் பெயரை அதிமுக அம்மா அணி என்றும் ஒதுக்கக் கோரியிருந்தார்.

  தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு

  தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு

  இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், தினகரனுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. அதோடு, தினகரன் கேட்டுக்கொண்ட மூன்று பெயர்களில் ஒன்றை ஒதுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எம்ஜிஆர், அம்மா அண்ணாதிமுக என்ற பெயரை ஒதுக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் கோரியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TTV Dinakaran spokes to press person in Madurai new party launch after election commission announcement.Delhi High Court verdict on TTV Dinakaran's plea permission to use suitable name for his faction and cooker symbol as temp.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற