வானதியா, தமிழிசையா, ராஜாவா?... அடுத்த தமிழக பாஜக தலைவர் யார்??.. தீவிர ஆலோசனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக தலைவராக யாரை நியமிப்பது என்பதற்கான பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன.

தமிழக பாஜக தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுள்ளார். எனவே அவரே தொடர்ந்து தமிழக பாஜக தலைவராகவும் பதவி வகிக்க முடியாது. எனவே தமிழகத்துக்கான புதிய பா.ஜ.க தலைவரை நியமிக்க பா.ஜ.க மேலிட நிர்வாகிகள் தமிழக பா.ஜ.க நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு வருகின்றனர்.

New president for Tamilnadu BJP

தமிழக மேலிட பார்வையாளர்கள் முரளிதர ராவ் மற்றும் சதீஷ் ஆகியோர் இன்று சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வந்து, புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டனர்.

மதியத்துக்கு மேல் மாநில நிர்வாகிகளிடம் அவர்கள் கருத்து கேட்டனர். கருத்துகளை கேட்டறிந்து அதன் அடிப்படையில் ஒரு பட்டியலை தயார் செய்து கொண்டு, டெல்லி செல்லும் தமிழக மேலிட பார்வையாளர்கள், தேசிய தலைவர் அமீத் ஷாவிடம் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அமித் ஷா இன்னும் ஒரு மாதத்திற்குள் தமிழகத்திற்கு புதிய தலைவரை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

தமிழிசை சவுந்தர்ராஜன், வானதி சீனிவாசன், எச்.ராஜா ஆகியோர் பெயர்கள் புதிய தலைவருக்கான பட்டியலில் முன்னணியில் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+