For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரகுபதி விசாரணை ஆணைய தலைவர் நீதியரசர் ரகுபதி ராஜினாமா.. தலைமைச் செயலாளருக்கு கடிதம்

புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்ததா என்று விசாரிக்க அமைக்கப்பட்ட கமிஷனின் தலைவர் நீதியரசர் ரகுபதி தற்போது ராஜினாமா செய்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    முன்னாள் நீதிபதி ரகுபதி விசாரணை கமிஷனில் இருந்து விலகல்- வீடியோ

    சென்னை: புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்ததா என்று விசாரிக்க அமைக்கப்பட்ட கமிஷனின் தலைவர் நீதியரசர் ரகுபதி தற்போது ராஜினாமா செய்துள்ளார்.

    கடந்த திமுக ஆட்சியில் சென்னையில் அண்ணா சாலையின் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பெரிய பிரமாண்ட புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதை விசாரிக்க ஹைகோர்ட் ஓய்வுப்பெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

    New Secretariate Building Case: Investigation commission head Ragupathi resigns

    இத்தனை வருடமாக நடந்த இந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் நடக்கவில்லை. இதனால் கோபமடைந்த உயர் நீதிமன்றம் இந்த கமிஷனை கலைக்கும்படி கூறியது. இத்தனை ஆண்டுகளாக அந்த கமிஷனுக்கு அலுவலகம், ஊழியர்கள் என்று பெரும் தொகையை அரசு ஏன் செலவு செய்கிறது என்று கடுமையாக கேள்வி எழுப்பி இருந்தது.

    மக்களின் வரிப்பணம் ஏன் வீணாகிறது என்று கருத்து தெரிவித்தது. சென்னை ஹைகோர்ட் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ரகுபதி ஆணையத்தை கலைக்க உத்தரவிட்டார். ஆனால் ரகுபதி பதவிக்காலத்தை மேலும் 3 மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

    இந்த நிலையில் ரகுபதி விசாரணை ஆணைய தலைவர் நீதியரசர் ரகுபதி ராஜினாமா செய்துள்ளார். தலைமைச் செயலாளருக்கு ரகுபதி தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். அவர் தனக்கு அரசு வழங்கிய காரையும் திருப்பி ஒப்படைத்துள்ளார்.

    ஓய்வு பெற்ற நீதிபதிகள் வேறு பதவியை தேடி ஓடுவதை போல ஹைகோர்ட் கூறியிருந்தது தனக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். ஹைகோர்ட் கருத்து முன்னாள் நீதிபதிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கடிதத்தில் ரகுபதி குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    New Secretariate Building Case: Investigation commission head Ragupathi resigns.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X