தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்கு அறங்காவலர்களாக மோதிலால் வோரா மற்றும் ராஜாஜி பேரன் நியமனம்!
சென்னை: தமிழக காங்கிரஸ் அறக்கட்டளைக்கு புதிய அறங்காவலர்களை நியமனம் செய்து அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் மோதிலால் வோராவை நியமித்துள்ளார்.

மேலும், அப்பதவிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இந்திய அரசின் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் துணை தலைவரும், பிரச்சார் பாரதி ஆணையத்தின் முன்னாள் உறுப்பினரும், மூத்த அறிஞர் ராஜாஜியின் பேரனுமான சி.ஆர்.கேசவன் ஆகியோரையும் நியமித்திருக்கிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்கு தேனாம்பேட்டையில் 180 கிரவுண்ட் நிலம் கட்டிடம், கடைகள், 20 கிரவுண்ட்டில் காமராஜர் அரங்கம், 20 கிரவுண்டில் சத்தியமூர்த்தி பவன் ஆகியவை உள்ளன. பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சொத்துக்களை இவர்கள் பராமரிப்பார்கள்.
இதுவரை தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை அறங்காவலர்களாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்தனர். இப்போது முதல் முறையாக அகில இந்திய காங்கிரஸ் பொருளாளரும் ஒரு அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications