For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புத்தாண்டில் பைக் ரேஸ் செய்தால் பாஸ்போர்ட் கிடையாது.. சென்னை காவல்துறை அதிரடி எச்சரிக்கை

புத்தாண்டு தினத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டால் பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்று தரப்படாது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: புத்தாண்டு தினத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டால் பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்று தரப்படாது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

புத்தாண்டு தினத்தின் போது சென்னையில் இளைஞர்கள் பொதுவாக பைக் ரேஸில் ஈடுபடுவார்கள். மெரினா, பெசன்ட் நகர், ஈசிஆர் போன்ற இடங்களில் நிறைய பைக் ரேஸ் போட்டிகள் வைக்கப்படும்.

New Year Bike racers won't get NOC for passport - Traffic Police

பலர் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவார்கள். இதனால் நிறைய விபத்துகளும் ஏற்படும்.

தற்போது இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி இனி புத்தாண்டு தினத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டால் பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்று தரப்படாது என்று கூறியுள்ளது.

அதேபோல் குடிபோதையில் வாகனம் ஓட்டினாலும் பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்று வழங்கப்படாது என்றும் கூறப்பட்டு இருக்கிறது. மேலும் புத்தாண்டை விபத்து இல்லாமல் கொண்டாட வேண்டும் என்பதே காவல்துறையின் இலக்கு என்று சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் கமிஷனர் அருண் தெரிவித்து இருக்கிறார்.

English summary
Additional Commissioner of Traffic Police Arun says, They wont give No Objection Certificate for rash drivers and Bike racer who caught in New Year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X