6 மாதத்தில் கசந்துபோன “காதல் திருமணம்” – புது மணப்பெண் தற்கொலை!
திருச்சி: திருச்சியில் காதல் திருமணம் புரிந்து கொண்ட பெண் ஒருவர் 6 மாதங்களில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி ஏர்போர்ட் காமராஜ்நகர் வயர்லெஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் டிரைவர் வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
குடித்துவிட்டு தகராறு:
திருமணம் முடிந்து சில நாட்களிலேயே சதீஷ் குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
விஷம் குடித்த மனைவி:
இதில் மனம் உடைந்த பிரியா சம்பவத்தன்று விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தார்.
பிரியா பரிதாப பலி:
இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரியா நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
மகளிர் போலீசார் விசாரணை:
இது குறித்து பொன்மலை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணம் ஆகி 6 மாதங்களே ஆவதால் சதீஷிடம், ஆர்.டி.ஓ விசாரணையும் நடைபெற்று வருகின்றது.
குடும்பத்தினர் சோகம்:
கணவரின் குடிப் பழக்கத்தால் காதல் திருமணம் செய்த இளம்பெண் 6 மாதத்தில் தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications