திருமணமாகி 4 நாட்களில் புதுப்பெண் தற்கொலை – காரணம் வரதட்சிணை!
தேனி: தேனி, பெரியகுளத்தில் திருமணமான 4 நாட்களில் புதுமணப்பெண் வரதட்சிணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகுளம் தென்கரை வாகம்புளி தெருவைச் சேர்ந்தவர் ரோஸ் என்ற அஸ்னியா பானு. இவருக்கும் பெரியகுளத்தைச் சேர்ந்த யாசர் அராபத் என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் யாசர் அராபத், அவருடைய தாயார், சகோதரர், சகோதரி ஆகிய நான்கு பேரும் ரோஸை வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாகத் தெரிகின்றது. இந்தப்பிரச்னையில் வியாழக்கிழமை மாலை அஸ்னியாபானுவை அவரது தாய் வீட்டுக்கு யாசர் அராபத் அனுப்பி வைத்துள்ளார்.
இதனால் மனம் உடைந்த ரோஸ் என்ற அஸ்னியாபானு வியாழக்கிழமை நள்ளிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவரது தாய் அமினா பேகம் கொடுத்த புகாரின் பேரில் பெரியகுளம் தென்கரை காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணமாகிய புதுமணப்பெண் என்பதால் இச்சம்பவம் தொடர்பாக பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.ஜானகியும் விசாரணை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications