ஈரோட்டில் தவறான சிகிச்சையால் புதுமாப்பிள்ளை மரணம் – உறவினர்கள் முற்றுகை போராட்டம்
ஈரோடு: ஈரோட்டில் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் புது மாப்பிள்ளை மரணமடைந்த காரணத்தினால் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி கஸ்தூரிபா காலனியை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் பிரகாஷ். இவருக்கும் இந்துமதி என்பவருக்கும் மூன்று மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது.
கடந்த 23 ஆம் தேதி காலை வங்கி வேலைக்காக வீட்டில் இருந்து டூவீலரில் சென்ற பிரகாஷ் முத்துகவுண்டன்பாளையம் பிரிவு சுற்றுப்பாதைக்கு பக்கத்தில் வந்தபோது எதிரே வந்த லாரி மோதியது.
இதில் லேசான காயத்துடன் தப்பிய பிரகாஷ் அவரே எழுந்து ஒரு ஆட்டோ பிடித்து ஏறி ஈரோடு கொல்லம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
பிறகு தன் குடும்பத்துக்கு மொபைல் மூலம் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பிரகாஷின் உடல் நிலையை பரிசோதித்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என உறவினர்களிடம் அறிவுறுத்தினர்.
இதற்காக மூன்று லட்சம் ரூபாய் செலவாகும் என தெரிவித்தனர். உறவினர்களும் உடனடியாக 1.5 லட்சம் பணத்தை செலுத்தினர். அறுவை சிகிச்சையை முடித்ததும் மயக்கம் தெளிய இன்னும் இரண்டு நாள் ஆகும். பிரகாஷ் நன்றாக உள்ளார்' என உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று காலை பிரகாஷ் இதய நோயால் இறந்து விட்டதாக கூறிய டாக்டர்கள் அவரது உடலை எடுத்துக்கொண்டு செல்லுமாறு தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகம் தவறான சிகிச்சை அளித்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
தகவலறிந்து வந்த சூரம்பட்டி போலீஸார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரகாஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிரகாசின் மரணம் குறித்து சூரம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications