திருமணமான 11 நாட்களில் புதுப்பெண் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை… போலீசார் தீவிர விசாரணை
தூத்துக்குடி: திருமணமான 11 நாட்களிலேயே புதுப்பெண் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ஓட்டப்பிடாரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ளது சிலோன் காலனி. அங்கு காசிலிங்கமும் அவரது மனைவி லட்சுமியும் வசித்து வந்தனர். காசிலிங்கம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். லட்சுமி ஒரு கூலி தொழிலாளி. இவருக்கு 25 வயதில் இந்துமதி என்ற மகள் இருந்தார். இவர் கோவில்பட்டியில் நர்சிங் படித்து வந்தார்.

இந்நிலையில், இந்துமதியின் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, அதே பகுதியை சேர்ந்த தங்களது உறவினரான ராமசாமி என்பவரின் மகன் வேல்பாண்டியனுக்கு கடந்த 8ந் தேதி திருமணம் செய்து வைத்தார் அவரது தாய் லட்சுமி.
திருமணமாகி 11 நாட்கள் ஆன நிலையில், இந்துமதி நேற்று மதியம் தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு அவர் தான் அணிந்திருந்த சுடிதார் துப்பாட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ஓட்டப்பிடாரம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த மணியாச்சி டிஎஸ்பி கோவிந்த ராஜன், ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இந்துமதியின் உடலை மீட்டு ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் கண்ணபிரான் விசாரணை நடத்தி வருகிறார்.
ஏன் இந்துமதி தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்த எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications