நகைகளை விற்ற கணவர்: மதுராந்தகத்தில் புது மணப்பெண் தூக்கு போட்டு தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகத்தில் தனது நகைகளை கணவர் விற்றதால் இளம்பெண் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மதுராந்தகம் செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோட்டி என்பவரின் மகள் புவனேஸ்வரி(20). அவருக்கும் செய்யூரை அடுத்த புத்தூரைச் சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வேல்முருகன் தனது மனைவியின் நகைகளை விற்றுள்ளார்.

நகைகளை விற்றது தொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நகைகளை விற்ற வேல்முருகன் புவனேஸ்வரியிடம் உனது பெற்றோரிடம் சென்று மேலும் நகைகள் வாங்கி வா என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த புவனேஸ்வரி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டுக்கு கிளம்பிச் சென்றார்.

பெற்றோர் வீட்டில் இருந்த புவனேஸ்வரி சோகமாகவே காணப்பட்டார். இந்நிலையில் அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து புவனேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப் பதிவு தெய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் புது மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி ஆர்.டி.ஓ. பழனியம்மாளும் விசாரித்து வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+