கரூரில் காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
கரூர்: கரூரில் காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் தோகமலையில் உள்ள செட்டி தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. அவரது மகள் ஜெயலட்சுமி(23). குளித்தலை அரசு கலைக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்த அவர் தன்னுடன் படிக்கும் கரூர் அருகே இருக்கும் நெரூரைச் சேர்ந்த கதிரவன் என்பவரை காதலித்து வந்தார்.
அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு அவர்கள் கரூர் அருகே உள்ள அரசு காலனியில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 24ம் தேதி ஜெயலட்சுமி தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஜெயலட்சுமியின் தாய் விஜயா போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications