காவிரி டெல்டாவில் திமுகவின் கை ஓங்குகிறது - கருத்துக்கணிப்பு முடிவுகள்
சென்னை: நியூஸ் 7 - தினமலர் நாளிதழ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது மண்டல வாரியாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று வெளியான காவிரி டெல்டா மாவட்டங்களுக்கான கருத்துக்கணிப்பில் திமுக அதிக இடங்களை வெல்லும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 13 தினங்களே உள்ளன. என்ன அலை வீசுகிறது என்று யாராலும் கணிக்க முடியவில்லை. தொலைக்காட்சிகள், நாளிதழ்கள், வார இதழ்களில் கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

தஞ்சை மாவட்டத்தில் திமுகவுக்கு என்று தனி வாக்கு வங்கி உண்டு. அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கும் கணிசமான வாக்குகள் இருப்பதால் திமுகவே அதிக இடங்களை வெல்லும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் ஜி.கே. வாசனுக்கும், மூப்பனாருக்கும் இந்த பகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது.
வாசன் அதிமுக கூட்டணியில் இடம் பெறாததால் அவரின் ஆதரவு வாக்குகள் மக்கள் நலக் கூட்டணிக்கு கிடைக்கிறது. இதனால் அதிமுவுக்கு பெரும் பின்னடைவாகவே அமைகிறது. ஒருவேளை தமாகா, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தால் டெல்டா மாவட்டங்களில் ஒரளவு தொகுதிகளை அந்த கூட்டணி கைப்பற்றியிருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமாகா ஒரளவு வாக்குகளை பிரிப்பதால் அது அதிமுகவின் வெற்றியை பெருமளவு பாதிக்கிறது. மேலும் ஆளும் கட்சி மீதான எதிர்ப்பு அலை ஓட்டுக்களால் திமுவு கூட்டணி எளிதில் வெற்றி பெரும் சூழல் அங்கு நிலவுகிறது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 தொகுதிகளில் திமுக, கூட்டணி 6 தொகுதியிலும், அதிமுக கூட்டணி 2 தொகுதியில் மட்டும் வெல்லும் வாய்ப்புள்ளதாக நியூஸ் 7 - தினமலர் நாளிதழ் கருத்துக்கணிப்பும் கூறுகின்றன.
அதேபோல் நாகை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் திமுக கூட்டணி 4 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 2 தொகுதிகளிலும் வெல்லும் வாய்ப்புள்ளாதகவே நியூஸ் 7 - தினமலர் நாளிதழ் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications