தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து, வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புண்டு. அடுத்து வரும் 3 நாள்களுக்கும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் தெளிவாகக் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில், அதிகாலை நேரங்களில் மூடுபனி காணப்படும்.
வங்காள விரிகுடா கடல் பகுதியிலிருந்து, நிலம் நோக்கி வரும் காற்றின் மேலடுக்கில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியும், மாலத்தீவு முதல் லட்சத் தீவு வரையிலான பகுதியில் காற்றின் மேலடுக்குச் சுழற்சியும் காணப்படுகிறது.
இதன் காரணமாகவே, தமிழகம், புதுச்சேரியில் அடுத்து வரும் 3 நாள்களுக்கு மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 86 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications