தமிழகம், ஆந்திராவில் இன்னும் இருக்கு 'தேவதாசி' கொடுமை.. மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!
தமிழகம் மற்றும் ஆந்திராவில் இன்றும் நடைமுறையில் இருக்கும் தேவதாசி முறை குறித்து விளக்கமளிக்குமாறு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை : தமிழகம் மற்றும் ஆந்திராவில் இன்றும் நடைமுறையில் இருக்கும் தேவதாசி முறை குறித்து விளக்கமளிக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் தலைமைச் செயலாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேவதாசி முறை போன்று சிறுமிகள் பெண்களை கோவிலுக்கு நேர்ந்து விடும் கொடூரம் இன்னும் அரங்கேறுவதாக வெளியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் மற்றும் அதன் அருகில் உள்ள கிரமங்களில் சிறுமிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு பலரும் புகார் அளித்துள்ளனர். இந்தப் பகுதிகளில் சிறுமிகள் மணப்பெண் போல அலங்கரிக்கப்பட்டு திருவிழாவிற்கு அனுப்பப்படுகின்றனர்.

நேர்ந்து விடப்படும் சிறுமிகள்
அங்கு இளைஞர்கள் அந்தப் பெண்களை நிர்வாணப்படுத்திய பின்னர் அவர்கள் மாதம்மன் கோவிலுக்கு நேர்ந்து விடப்படுவிதாகத் தெரிகிறது. இந்தச் சிறுமிகள் அதற்குப் பின்னர் பெற்றோருடன் சேர்ந்து வாழ அனுமதி கிடையாது.

தேவதாசி முறையின் மற்றொரு விதம்
கோவிலில் மட்டுமே வசிக்க வேண்டும், அவர்களை பொதுசொத்து போல நடத்துவதோது, பாலியல் வன்முறைக்கும் ஆளாக்கப்படுவதாக மனித உரிமைகள் ஆணையத்திற்கு புகார் வந்துள்ளது. தேவதாசி முறையின் மற்றொரு விதம் இது என்று சொல்லப்படுகிறது.

உரிமை மீறல்
இந்தப் புகார்கள் குறித்து பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன. இது மிபவும் உற்று பார்க்க வேண்டிய விஷயம் என்று மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது. இத்தகைய செயல் நடப்பது உண்மையெனில் அது அடிப்படை உரிமை மீறல் மட்டுமின்றி அவர்களுக்கான கல்வி உரிமை மற்றும் கண்ணியத்துடன் வாழும் உரிமையை மறுக்கும் வன்முறைச் செயல் என்று மனித உரிமை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இன்னும் ஒழிக்கப்படவில்லையா?
கடந்த 2003ல் குழந்தைகள் பாதுகாப்பு மேம்பாட்டு மையம் மற்றும் பெண்கல்வி மேம்பாட்டு மையம் மேற்கொண்ட ஆய்வின்படி திருவள்ளூர் மாவட்ட கிராமங்களில் தேவதாசி முறை தடை செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்திருந்தது. ஆனால் ஆந்திர எல்லையையொட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் அருகில் இருக்கும் சில கிராமங்களில் இன்னும் தேவதாசி முறை நடைமுறையில் இருப்பதாக சிறார் நீதி வாரிய உறுப்பினர் மற்றும் செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

கடவுள் பாதுகாப்பில்
இந்த சிறுமிகள் மலைவாழ் மக்கள் இல்லை என்றும், சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பருவமடைந்த பெண்களை கடவுளின் பாதுகாப்பில் விடுவதாகக் கூறி இந்த அநீதி நடைபெறுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

நோட்டீஸ்
எனவே இந்த குற்றச்சாட்டு குறித்து இருமாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், போலீஸ் டைரக்டர் ஜெனரல்கள், திருவள்ளூர், சித்தூர் மாவட்ட நீதிபதிகள், போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோர் 4 வாரங்களுக்கு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அப்போ உரிமை தொகை நிறுத்தப்படுமா? "தமிழக நிதி நிலைமை மோசம்! ஆனால்.." நிதியமைச்சர் கொடுத்த விளக்கம் -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகாவைவிட தமிழக மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு.. வெள்ளை அறிக்கை -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் மீது கடன் சுமை! 4 முக்கிய காரணங்களை சொன்ன வெள்ளை அறிக்கை -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications