சுனாமி நினைவு தினம்- தூத்துக்குடி கடலில் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
தூத்துக்குடி: சுனாமி தாக்கியதன் 9வது நினைவு தினம் தூத்துக்குடி கடலோர மீனவ கிராமங்களில் கடைபிடிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி தமிழக கடலோரத்தில் உள்ள மீனவ கிராமங்களை சுனாமி தாக்கியது. இதில் தூத்துக்குடி கடலோர மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் பலியாகினர்.
படகுகள், மீன்பிடி பொருட்கள் அனைத்தும் கடலுக்குள் சென்றன. அந்த சுனாமியில் உயிர் இழந்தவர்கள் நினைவாக அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடி திரேஸ்புரத்தில் உள்ள மீன் ஏல கூடம் அருகே நேற்று நடைபெற்றது. சுனாமியால் உயிரிழந்தவர்களின் உறவினர்களும், சிறுவர்களும், சிறுமிகளும், பொதுமக்களும் சங்க முக கடல் பகுதியில் பால் ஊற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
சுனாமியால் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வேம்பார் கடற்கரை பகுதி முதல் திரேஸ்புரம் வரை வசிக்கும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. மேலும் தூத்துககுடியில் உள்ள சமூக சேவை அமைப்பில் மெழுகுவர்த்தி ஏற்றி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
திரேஸ்புரம் குழந்தை திரேசால் ஆலயத்தில் சுனாமியில் இறந்தவர்களுக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். ஊர்வலமாக திரேஸ்புரம் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனால் அந்த பகுதியே சோகமாக இருந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications