நெல்லை: டெங்கு காய்ச்சல் எதிரொலி.. பள்ளிகளில் நிலவேம்பு கசாயம் வழங்க உத்தரவு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் மீண்டும் தலை தூக்கியுள்ளது. இதை தடுக்கும் வகையில் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முயற்சியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் அருகே டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் தாக்கி இதுவரை அப்பகுதியில் 5 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மாநில சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, பள்ளிகளில் வாரத்தில் 5 நாட்கள் நிலவேம்பு கசாயம் மாணவ, மாணவியருக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் நோயாளிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் மாவட்ட பள்ளிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் நிலவேம்பு கசாயத்தை மாணவ, மாணவிகளுக்கு பெரிய அண்டாக்களில் எடுத்துச் சென்று வழங்கி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பாளை சராள் தக்கர் மேல்நிலைப்பள்ளியில் நிலவேம்பு கசாயம் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. நிலவேம்பு கசாயம் வழங்கினாலும் கொசு தொல்லை நெல்லை மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக மாநகர பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. எனவே டெங்குவில் இருந்து காப்பதற்காக நிலவேம்பு கசாயம் கொடுப்பது போல, கொசுக்களை ஒழிக்கவும் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications