ஊட்டியில் "கால்" வைக்க முடியல.. நீலகிரியே உறைபனியில் உதறுது.. ரோடெல்லாம் பனிக்கட்டி.. மைனஸ் டிகிரி

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: நீலகிரியில் கடுமையான பனி கொட்டி வருகிறது.. உறைபனியில் ஊட்டி உறைந்து கொண்டிருக்கிறது.. இதனால், மலை மாவட்ட மக்களின் இயல்புநிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியை பொறுத்தவரை, நவம்பர் மாதமே குளிர் துவங்கிவிடும்.. நவம்பர் இறுதியில் ஆரம்பித்த குளிர், டிசம்பர் மாதமும் வலுவாகி, ஜனவரியில் அதிகரித்து மார்ச் முதல் வாரம் வரை தொடர்வது வாடிக்கையான ஒன்று.

Nilgiris District Ooty and Nilgiri People suffer due to heavy fog at 2 degree Freezing celsius cold temperature

உறைபனி: ஆனால், கடந்த வருடம் அதிக அளவு மழை நாட்கள் இருந்ததாலும், மற்றும் மேகமூட்டம் காரணமாகவும் உறைபனி தாமதமானது.. நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில்கூட உறைபனி குறைவாகவே இருந்தது.. ஆனால், டிசம்பர் மாதம் செல்ல செல்ல, பனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது.

வழக்கத்தை விட கடுங்குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் சாலையோரம் நிற்கும் கார், மோட்டார் சைக்கிள் உள்பட பல்வேறு வாகனங்களின் இருக்கைகளில் உறைபனி கொட்டியபடியே உள்ளது..

கொட்டும் பனி: இரவு நேரங்களில் பெய்யும் பனிப்பொழிவானது, காலை 8 மணி வரை நீடித்து வருகிறது.. சாயங்கால நேரங்களில் சீக்கிரமாகவே சாலைகள் வெறிச்சோடி விடுகின்றன..

உறைபனி காரணமாக, சாலைகளில் வரும் வாகனங்களும், பனிமூட்டத்தில் தெளிவாக தெரிவதில்லை. புல்வெளிகளில் சாம்பல் நிறத்தில் பூத்து போயுள்ளன.. தார் ரோடுகளில் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல பனி படர்ந்து காணப்படுகிறது.. மந்தமான கால நிலை காரணமாக, குன்னூர் - மேட்டுபாளையம் ரோட்டில், வாகன ஓட்டிகள், வண்டிகளில் லைட்டுகளை ஒளிர விட்டபடியே மெதுவாக ஓட்டிச் செல்கிறார்கள்..

மக்கள் பாதிப்பு: உறைபனியால், மாவட்ட மக்கள் வீட்டுக்கு வெளியே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். இந்த குளிரால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்..

பொங்கல் தொடர்விடுமுறையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வந்திருந்த பயணிகள், அதிகாலையில் நிலவும் கடுங்குளிரால், வெளியில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்தார்கள்.. பலர் சுற்றுலா பயணிகள் தங்கும் இடங்களிலிருந்து வெளியே வராமல் முடங்கி கிடக்கிறார்கள். இப்போது, உறைபனி அதிகமாகிவிட்டதால், சுற்றுலா பயணிகளின் வருகையும் நீலகிரியில் குறைந்து காணப்படுகிறது.

உறைபனி: இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கம் வரும் சில நாட்களில் அதிகமாக காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

"நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்ஷியசை ஒட்டி பதிவாகும் என்பதால், அந்த இடங்களில், இரவு நேரத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது" என்று நேற்றைய தினமும் வானிலை மையம் ஒரு அலர்ட் விடுத்துள்ளது.

கடந்த வாரம் முழுவதுமே ஊட்டி தாவரவியல் பூங்கா, ரேஸ்கோர்ஸ், ரோஜா பூங்கா, தலைகுந்தா, கேத்தி, லவ்டேல் பகுதிகளில் வெட்பநிலை 2 ஆக பதிவாகியிருந்தது.. நேற்றும், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 2 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அலர்ட்: "கடல் மட்டத்திலிருந்து 2,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகம் காணப்படும்.. கூடலூர், பந்தலூர் பகுதிகளைவிட, ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் இந்த வருடம் கடுமையான உறைபனி நிலவும் வாய்ப்புள்ளது.. மேக மூட்டமின்றி தொடர்ந்து காணப்பட்டால் வெப்பநிலை மைனஸில் செல்லவும் வாய்ப்புள்ளது" என்று, 2 நாட்களுக்கு முன்பு, இந்திய மண் மற்றும் நீர்வளப்பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் அலர்ட் விடுத்திருந்தனர்.

ஏற்கனவே குளிரில் நீலகிரி மக்கள் நடுங்கிவரும்நிலையில், வானிலை மையம் மற்றும் ஆய்வாளர்களின் அலர்ட்டானது, இன்னும் நடுநடுங்க வைத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+