விஜயகாந்துக்கு அல்சீமர் டிமென்சியா எனும் மறதி நோய்... சொல்வது வணக்க்க்கம் நிர்மலா பெரியசாமி
திருச்சி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் அல்சீமர் டிமென்சியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால்தான் அவர் பேச வந்ததை 5 நிமிடத்திற்குள் மறந்து விடுகிறார் என்றும் போட்டு தாக்கியுள்ளார் வணக்க்கம் புகழ் நிர்மலா பெரியசாமி. மது அருந்துவது மட்டுமல்லாது தொடர்ச்சியாக "டிரக்ஸ்" பயன்படுத்துகிறார் விஜயகாந்த் என்றும் திருச்சியில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்ட மேடையில் பேசியுள்ளார் நிர்மலா.
முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாள் விழாவை அ.தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் கடந்த ஒருவாரமாக கொண்டாடி வருகின்றனர். கூடவே பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் நிர்மலா பெரியசாமி, அம்மா புகழ் பாடியதை விட விஜயகாந்தையும், மு.க.ஸ்டாலினையும்தான் அதிரடியாக தாக்கி பேசினார். நிர்மலா பெரியசாமி பேசியதாவது:

அம்மாவை கொச்சைப்படுத்துவதா?
காஞ்சிபுரத்தில் நடந்த தேமுதிக மாநாட்டில் விஜயகாந்தின் மனைவி, அம்மாவை ஒருமையில் திட்டிருயிருக்கிறார். ஓட்டுக்காக திட்டங்கள் கொண்டுவராமல், தமிழகத்திற்காக தொலை நோக்கு பார்வையில் அம்மா உணவகம், அன்னதானத் திட்டம், குடும்பத்துக்கு 20 கிலோ அரிசி என மக்களுக்காக கொண்டுவந்த திட்டங்கள் ஏராளம். இப்படிப்பட்ட அம்மாவை இந்த பிரேமலதா கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்.

விஜயகாந்துக்கு மறதி நோய்
இவர் என்னத்துக்காக காய் நகர்த்திக்கிட்டு இருக்கிறார் என்றால், விஜயகாந்த் அல்சீமர் டிமென்சியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என நம்பதகுந்த நண்பர்கள் மூலம் எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர் பேச வந்ததை 5 நிமிடங்களுக்கு மேல் மறந்துபோவார், அவர் என்ன பேசுகிறார் என அவருக்கே தெரியாது. சரக்கு அடிப்பதை தாண்டி, தொடர்ச்சியாக ட்ரக்ஸ் பயன்படுத்த ஆரம்பிச்சிட்டார்னு சொல்லுறாங்க. அதனால்தான் இப்படி விஜயகாந்த் உளறி கொட்டுகிறார்.

துணைமுதல்வர் பதவி
அப்படிப்பட்டவரை மேடையில் ஏற்றி, கணவர் ஒண்ணும் இல்லை. நான்தான் இனி எல்லாம் என விளம்பரம் தேடி வருகிறார் பிரேமலதா. கட்டுன புருசனை அசிங்கப்படுத்தும் மனைவி பிரேமலதாவாகதான் இருக்க முடியும். இதுக்கு நடுவுல விஜயகாந்தின் மூத்த மகனுக்கு துணை முதல்வர் பதவி வேணும்னு பேச்சுவார்த்தை நடத்துறாங்களாம். அதனால் நமக்கு ஒண்ணும் நஷ்டம் இல்லை.

நிர்மலா சாபம்
இந்த கூட்டணி மட்டும் நடந்தது என்றால் தமிழகம் அவர்களை புறக்கணிக்கணும். தேமுதிகவுக்கு 11 சதவீதமாக இருந்த வாக்கு வங்கி இப்போது 4 சதவீதமாக குறைந்துள்ளது. தேய்ந்துபோன தேமுதிக, அடுத்த தேர்தலில் அடியோடு அழிந்துபோகும் என்று சாபம் விட்டார்.

ஸ்டாலின் மன்னிப்பு
விஜயகாந்த் அரசியலில் இருப்பதும், 93 வயது தாத்தா முதல்வராக துடிப்பதும் அசிங்கம் என்று அடுத்த அட்டாக்கை ஆரம்பித்தார். தற்போது தமிழகத்தில் முதல்வர் தான்தான் என ஆளாளுக்கு சொல்லிக்கிட்டு அலைகிறார்கள். குறிப்பாக ஸ்டாலின் மன்னிச்சிடுங்க என மன்னிப்பு கேட்டுக்கொண்டு அலைகிறார். மிஸ்டர் ஸ்டாலின் எதை மன்னிப்பது என்று கேட்டார்.

நீதி கேட்டு பேரணி
நீங்கள் செய்த இமாலய ஊழலை மன்னிப்பதா, அடுத்து நீதிக்கேட்டு பேரணி நடத்துகிறாராம் ஸ்டாலின், மிஸ்டர் ஸ்டாலின் அம்மா உத்தரவிட்டால் அதிமுகவின் மகளிர் அணி சார்பாக நீதிகேட்டு நாங்கள் பேரணி நடத்துகிறோம். சபரீசன் போதை மருந்து பிரச்னையில் சிக்கினாரே, உதயநிதி கார் இறக்குமதி செய்ததில் ஊழலில் சிக்கினாரே அதற்கு நீதி கேட்கிறோம் மிஸ்டர் ஸ்டாலின்.

தோல்வி முகம்
தமிழனை தலைகுப்புற செய்ய வைத்த 2ஜி வழக்கில் திகாரில் அடைக்கப்பட்டாரே கனிமொழி அதற்கு நீதி வேண்டும் ஸ்டாலின். இப்படி நாங்கள் நீதி கேட்டால் என்னவாகும் என யோசித்து பாருங்கள் மிஸ்டர் ஸ்டாலின். இதையெல்லாம் எப்படி மன்னிக்க முடியும் மிஸ்டர் ஸ்டாலின்.
வெள்ள பாதிப்புக்காக 1 கோடி கொடுத்த திமுக என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா என்கிற விளம்பரத்திற்கு ஒரு நாளைக்கு 18 கோடி செலவழிக்கிறார்கள்.

ஆட்சியை பிடிக்கும் கனவு
சென்னை கொளத்தூர் தொகுதியில், 2004 தபால் ஓட்டில் ஜெயித்த ஸ்டாலின் எல்லாம் இங்கு அம்மாவை விமர்சனம் செய்கிறார். அவங்க டாடி கருணாநிதி அடுத்து ஆட்சியை பிடிக்கும் கனவில் இருக்கிறார். உங்கள் கனவுகளுக்கு தமிழக மக்கள் சமாதி கட்டுவார்கள். இந்த கலைஞர் பாமகவை வளர்த்துவிட்டார். அம்மா அப்படியே உட்கார வைத்தார்கள்.

அங்கீகாரத்திற்கு காரணம்
இந்த பம்பரம், மாம்பலம், முரசு சின்னம் எல்லாம் கிடைக்க, அவர்களுக்கு அரசியலில் அங்கீகாரம் கிடைக்க யார் காரணம், எங்க முதல்வரம்மாதான் காரணம். ஒரு குடிகாரர் எதிர்க்கட்சி தலைவராக எங்க கட்சி தொண்டர்கள் உழைப்புதான் காரணம்.

தவிடு பொடியாக்குவார்
அம்மா அவர்கள், அரசியல்வாதியில்லை ஸ்டேட்ஸ்மென், பல்லாயிரக்கணக்கானவர்களில் ஒருவர். இங்கிலாந்தின் வின்ஸ்ன்ட் சர்ச்சில், அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன், ரூஸ்வெல்ட், நேரு வரிசையில் உருவாகியிருக்கும் ஸ்டேட்ஸ்மென் நம் அம்மா, அதற்காக அவர்பட்ட துன்பங்கள் ஏராளம். அவற்றை எல்லாம் தவிடு பொடியாக்கியவர் அம்மா மட்டுமே.
முதல்வர் பதவி காலியில்லை
தமிழகத்தில் முதல்வர் பதவி வேக்கன்சி இல்லைன்னு, அப்படித்தான் எங்கம்மா இருக்க, எப்படி உங்களால் முதல்வராக முடியும். எங்கம்மாதான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என்று வேர்க்க விறுவிறுக்க பேசி அமர்ந்தார் நிர்மலா பெரியசாமி.












Click it and Unblock the Notifications