உண்மையான துரோகி யார்.. ஆர்.கே. நகர் தேர்தலில் தெரியும்.. நிர்மலா பெரியசாமி தாக்கு
குற்ற உணர்வு இல்லாமல் மக்களை சந்திக்க முடியும் என நிர்மலா பெரியசாமி கூறினார்.
சென்னை: உண்மையான துரோகி யார் என்பது நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தெரிய வரும் என்று அதிமுக நட்சத்திர பேச்சாளர் நிர்மலா பெரியசாமி கூறியுள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி பங்கேற்று பேசினார்.

அப்போது பன்னீர்செல்வத்தை புகழ்ந்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும் ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மக்கள் ஆதரவு இருப்பதால் அதிக ஓட்டுகளை பெறுவார்கள் என்றும் நிர்மலா பேசியுள்ளார். இதனால் அவருக்கும், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து கூட்டத்தில் இருந்து வெளியேறினார் நிர்மலா பெரியசாமி. அதன் பின்னர் கூடிய விரைவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் இணைய உள்ளதாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். மேலும் சில பேச்சாளர்கள் தன்னுடன் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் இணைவார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று மாலை ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த நிர்மலா பெரியசாமி தன்னை ஓபிஎஸ் அணியில் இணைத்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: ஜெயலலிதா மரணத்தில் தொண்டர்களுக்கு சந்தேகம் உள்ளது. அதை தெளிவுபடுத்த வேண்டும். உண்மையான துரோகி யார் என்பது ஆர்.கே.நகர் தேர்தலில் தெரியவரும் எனக் கூறினார்.
மேலும், இனிமேல் எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் மக்களை சந்திக்க முடியும்.விசுவாசத்திற்கு உண்மையாக இருப்பவர்களின் பக்கம் இணைந்துள்ளேன். நேற்றைய கூட்டத்தில் குண்டுகல்யாணம், வளர்மதி ஆகியோர் என்னை கட்சியில் இருந்து வெளியே செல்லுங்கள் என்று ஒருமையில் கூறினார்கள். இவ்வாறு நிர்மலா பெரியசாமி கூறினார்.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!











Click it and Unblock the Notifications