தமிழகத்தில் ரூ.2,838 கோடி மதிப்பில் நெடுஞ்சாலைப்பணிகள்... நிதின் கட்காரி அடிக்கல் நாட்டினார்
சென்னை: தமிழகத்தில் ரூ.2,838 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைப்பணிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின்கட்காரி இன்று அடிக்கல் நாட்டினார்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் புதிய பாலம் கட்டுவது உள்ளிட்ட ரூ.2,838 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடந்தது.

இதற்காக மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தமிழகம் வந்துள்ளார். காலை 11 மணியளவில் நாகர்கோவில் நான்கு வழிச்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா அவரது தலைமையில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கார் மூலம் மதுரை புறப்பட்டுச் சென்றார் நிதின் கட்காரி. அங்கு விரகனுார் ரிங்ரோட்டில் ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலைக்கான அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாக்களில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நேற்று மாலை தலைமைச்செயலகத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஒன்றரை மணிநேரம் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications