மதுரை: நடிகர் கார்த்திக் கார் மீது கல் வீச்சு!- கருத்துக் கேட்பு கூட்டத்தில் பரபரப்பு

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட, கட்சியின் தலைவரும் நடிகருமான கார்த்திக் கார் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதில், கார் கண்ணாடி உடைந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் மாநில செயலாளராக இருந்த பாலமுருகனை நீக்கி திங்கள்கிழமை தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து கட்சிக்கு புதிய செயலாளர் நியமனம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது பாலமுருகன் ஆதரவாளர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் மாநில செயலாளர் பூபாலன் 5 மாதத்திற்கு முன் இறந்த துக்கத்தினை, விசாரிக்காத கார்த்திக் மீது கோபம் கொண்ட அவரது ஆதரவாளர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து மதுரை திருநகர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற திருநகர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications