Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுகவுடன் கூட்டணி அமைப்போம் என்று நாங்க சொல்லலையே.... சொல்வது பாஜகவின் முரளிதரராவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் இன்னும் தங்கள் கூட்டணியில் தான் நீடிப்பதாகவும், சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் என்பது கற்பனையானது என்றும் அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் முரளிதரராவ் கூறினார். அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்று பா.ஜ.க.வும், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வும் ஒருபோதும் கூறியதில்லை. மற்றவர்கள் தான் அவ்வாறு ஆசைப்படுகிறார்கள் என்றும் அவர் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழக அரசு வெள்ளத்தை தடுப்பதற்கான முறையான நடவடிக்கைகளை சரியான நேரத்தில் செய்யவில்லை. நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பை அகற்றுவதிலும் தவறிவிட்டது என்றும் முரளிதரராவ் குற்றம் சாட்டியுள்ள முரளிதரராவ், திமுக தலைவர் யார்? ஸ்டாலினா? கருணாநிதியா என்றும் கேள்வி கேட்டு அதிரவைத்துள்ளார். இதை வைத்து பார்க்கும் போது திமுக, அதிமுக அல்லாத ஒரு அணியை அமைக்கவே பாஜக விரும்புவதாக தெரிகிறது.

2016ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். தேசிய கட்சியான பாஜகவும் தயாராகி வருகிறது. தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக தலைவர்களுடன் அக்கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் ராம்லால், பொதுச்செயலாளர் பி.முரளிதரராவ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

பாஜக மாநில உயர் நிலைக் குழு உறுப்பினர்களான தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் இல.கணேசன், ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், எஸ். மோகன்ராஜூலு, கேசவ விநாயகம், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

தேர்தல் களத்திற்கு தயார்

தேர்தல் களத்திற்கு தயார்

2016ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பது, தேர்தல் அறிக்கை தயாரிப்பது, தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்துவது ஆகியவை குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக கடந்த 15ம் தேதி டெல்லியில் தமிழக பாஜக தலைவர்களுடன் தேசியத் தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். கடந்த 19ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்தை தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சந்தித்தனர். இது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

உறுப்பினர் சேர்க்கை

உறுப்பினர் சேர்க்கை

சென்னை கமலாயத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பாஜகவின் தேசிய பொது செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதரராவ் பதிலளித்தார். பா.ஜ.க.வில் உறுப்பினர் சேர்க்கும் பணி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை 50 லட்சம் பேர் மிஸ்டு கால் மூலம் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். புதிதாக சேர்ந்த உறுப்பினர்களின் விவரம் பூத் அளவிலான நிர்வாகிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். தேர்தலில் இது எங்கள் அணிக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தும். லாபகரமானதாக இருக்கும்.

தமிழக அரசு தோல்வி

தமிழக அரசு தோல்வி

சென்னையில் பெய்த தொடர் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலைக்கு கொண்டு வருவதில் சென்னை மாநகராட்சி தோல்வியடைந்துவிட்டது. தமிழக அரசு வெள்ளத்தை தடுப்பதற்கான முறையான நடவடிக்கைகளை சரியான நேரத்தில் செய்யவில்லை. நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பை அகற்றுவதிலும் தவறிவிட்டது. இருந்தாலும், இந்த அசாதாரண சூழ்நிலையில் அரசை குறைகூற நாங்கள் விரும்பவில்லை.

அரசுக்கு எதிராக போராட்டம்

அரசுக்கு எதிராக போராட்டம்

மீட்பு நடவடிக்கைகளில் அரசுடன் இணைந்து செயல்பட்ட சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகளுக்கு எனது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன். அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக பா.ஜ.க.வும் உதவி செய்யும். வார்டு அளவில், மண்டல அளவில் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் தூய்மை பணியில் ஈடுபடுவார்கள். அதே நேரத்தில், கிளைகள் அளவில் இந்த விஷயத்தில் அரசை கண்டித்து பா.ஜ.க. போராட்டம் நடத்தும்.

தேர்தலை சந்திக்க தயார்

தேர்தலை சந்திக்க தயார்

சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில் தமிழக பா.ஜ.க. தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. இதற்காக, 36 பிரிவு அமைக்கப்பட்டுள்ளன. அதன் தலைவர்களாக தேசிய அளவிலான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திரமோடி, தேசிய தலைவர்கள் ஈடுபடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தேர்தல் அறிக்கை

தேர்தல் அறிக்கை

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை இன்னும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களின் ஆதரவும் பெறப்படும். பொது செயல் திட்டங்களின் அடிப்படையிலேயே தேர்தல் அறிக்கை இருக்கும். வெற்றிக்கான வழிவகைகளுடன் முழுவீச்சில் தேர்தல் களத்தை சந்திப்போம்.

திமுக தலைவர் யார்

திமுக தலைவர் யார்

தி.மு.க. தலைவர் யார் என்றே தெரியவில்லை. கருணாநிதியா?, மு.க.ஸ்டாலினா?. அதிக பிரச்சினைகளை கொண்டுள்ளது தி.மு.க. கூட்டணி. அந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன?. காங்கிரஸ் கட்சி தி.மு.க.வை நம்பவில்லை. தி.மு.க., காங்கிரஸ் கட்சியை நம்பவில்லை. அதிக ஊழல் செய்ததும் தி.மு.க. தான். எனவே, ஊழலுக்கு எதிராக அவர்களால் போராட முடியாது.

விஜயகாந்த் எங்க கூட்டணி

விஜயகாந்த் எங்க கூட்டணி

தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கின்றன. அடுத்த மாதம் தொடக்கத்தில், எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களையும் சந்தித்து வெளிப்படையாக பேசுவோம். அப்போது, சட்டமன்ற தேர்தலில் யார் தலைமை தாங்குவது என்பதும், முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்பதும் முடிவு செய்யப்படும். நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. இறுதி முடிவை பிரதமர் நரேந்திரமோடியும், எங்கள் கட்சியின் தேசிய தலைவர்களும் அறிவிப்பார்கள்.

ஜல்லிக்கட்டு பிரச்சினை

ஜல்லிக்கட்டு பிரச்சினை

ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் தான் காரணம். இந்த விஷயத்தில், தமிழக பா.ஜ.க. ஜல்லிக்கட்டுக்கு முழு ஆதரவை தெரிவிக்கிறது. மத்திய அரசிடம் இந்த பிரச்சினையை எடுத்து சென்று, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். தமிழர்களுக்கு நலன் பயக்கும் விஷயங்களுக்கு ஆதரவு அளிப்பதே தமிழக பா.ஜ.க.வின் குறிக்கோள். தமிழர் நலனுக்காக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினால், அதில் பா.ஜ.க.வும் பங்கேற்று அரசின் முடிவுக்கு ஆதரவளிக்கும்.

வீரன் அழகுமுத்துக்கோன்

வீரன் அழகுமுத்துக்கோன்

காங்கிரஸ் கட்சி என்னவோ நேரு குடும்பம் மட்டும்தான் சுதந்திரத்திற்காக போராடியதாக கூறிவருகிறது. மற்றவர்களை புறக்கணிக்கிறது. ஆனால், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு வீரன் அழகுமுத்துக்கோன் தியாகத்தை போற்றும் வகையில் தபால் தலை வெளியிடுகிறது. அதுமட்டுமல்லாமல், பள்ளி பாடப்புத்தகத்திலும் அவர் தொடர்பான பாடத்தை சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முழு வீச்சில் தயார்

முழு வீச்சில் தயார்

தமிழக பா.ஜ.க.வில் மாநில நிர்வாகிகள் பட்டியல் மாற்றியமைக்கப்பட உள்ளது. முதலில் மண்டல அளவில், மாவட்ட அளவில் நிர்வாகிகள் தேர்தல் நடந்து வருகிறது. மாநில நிர்வாகிகளும் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதற்கு முன்னதாக, சட்டமன்ற தேர்தலை முழு வீச்சில் எதிர்கொள்ளவே நாங்கள் தயாராகிவருகிறோம்.

நாங்க சொல்லவேயில்லை

நாங்க சொல்லவேயில்லை

தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் என்று கூறுவது கற்பனையானது. அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்று பா.ஜ.க.வும், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வும் ஒருபோதும் கூறியதில்லை. மற்றவர்கள் தான் அவ்வாறு ஆசைப்படுகிறார்கள். தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவானதாக இருக்கும் என்று கூறியுள்ளார் முரளிதரராவ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+