அரசியலில் நான் இருக்கும் வரை பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை: தினகரன் அதிரடி அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியலில் தாம் இருக்கும் வரை பாஜகவுடன் ஒட்டும் இல்லை- உறவும் இல்லை என அறிவித்திருக்கிறார் அதிமுக( அம்மா) துணை பொதுச்செயலாளர் தினகரன்.

நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலில் வெல்லும் சொல்லும் நிகழ்ச்சியில் அதன் முதன்மை ஆசிரியர் மு. குணசேகரனுக்கு அளித்த பேட்டியில் தினகரன் கூறியதாவது:

No alliance with BJP, Says Dinakaran

குணசேகரன்: அதிமுகவுடன் பாஜக கூட்டணிக்குப் போகவில்லை எனில் அக்கட்சிக்கு இருக்கும் ஆப்ஷன்களில் ஒன்று திமுக; மற்றொன்று நீங்கள்.. பாஜகவுடன் சமரசம் செய்து கொள்வதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

தினகரன்: பாஜகவுக்கு தமிழ்நாட்டில் பிடிக்காத நபர் சசிகலா, தினகரன். அதனால எங்க கூட அவங்க வரவும் மாட்டாங்க.. அது நடக்காத ஒரு விஷயம். அவங்க வந்து எங்களைக் கூப்பிட்டாலும் நாங்க போகமாட்டோம். தினகரன் அரசியலில் இருக்கிற காலம் வரை அவர் மதச்சார்பற்ற அணியில்தான் இருப்பார். பாஜகவுடன் எந்த காலத்திலும் ஒட்டோ உறவோ இல்லை. தினகரன் அரசியலில் இருக்கும் வரை அது நடைபெறவே நடைபெறாது.

மக்கள் மத்தியில் மதவாதத்தையும் ஜாதியவாதத்தையும் பேசுகிறது பாஜக. நடிகர் விஜய் படத்தில் ஒரு வசனம் பேசுகிறார். நடிகர் விஜய்யை நாம் கிறிஸ்துவர் என்றா பார்க்கிறோம்? நாம் ஜாதியைப் பார்த்தா நடிகர்கள் பின்னால் செல்கிறோம்? எம்ஜிஆர், ரஜினிகாந்தை என்ன ஜாதி என்றா பார்த்தோம்?

இவ்வாறு தினகரன் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
AIADMK (Amma) Party Deputy General Secretary TTV Dinakaran ruled out any alliance with the BJP.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற