திருவள்ளூர் மக்களுக்கு தெற்கு ரயில்வே குட்நியூஸ்.. புதிதாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும்
சென்னை: அரக்கோணம் வழித்தட மறுசீரமைப்புப் பணி காரணமாக, ஜூன் 1 முதல் 20 வரை பெங்களூரு பிருந்தாவன், மங்களூரு மேற்கு கடற்கரை, ஹூப்ளி, கச்சிகுடா (2 ரயில்கள்), மும்பை எல்.டி.டி ஆகிய 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருவள்ளூர் நிலையத்தில் தற்காலிகமாக 2 நிமிடங்கள் நின்று செல்லும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "அரக்கோணம் வழித்தடத்தில் மறுசீரமைப்பு பணி காரணமாக சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்காலிகமாக திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். அதன் விவரம் வருமாறு:

சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.12639) 1.06.2026 முதல் 20.06.2026 வரை (தினமும்) காலை 8.03 மணி முதல் 8.05 மணி வரை 2 நிமிடங்கள் நின்று செல்லும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூரு செல்லும் மேற்கு கடற்கரை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.22637) 1.06.2026 முதல் 20.06.2026 வரை (தினமும்) மாலை 3.13 மணி முதல் 3.15 மணி வரை 2 நிமிடங்கள் நின்று செல்லும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து ஹூப்ளி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.17314) 4, 6, 11, 13, 18, 20 ஆகிய தேதிகளில் (வியாழன் மற்றும் சனிக்கிழமை) மாலை 4.23 மணி முதல் 4.25 மணி வரை நின்று செல்லும்.
செங்கல்பட்டில் இருந்து கச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.17651) 1.06.2026 முதல் 20.06.2026 வரை (திங்கள், புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமை) மாலை 5.33 மணி முதல் 5.35 மணி வரை நின்று செல்லும்.
புதுச்சேரியில் இருந்து கச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.17654) 1.06.2026 முதல் 20.06.2026 வரை (செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.33 மணி முதல் 5.35 மணி வரை நின்று செல்லும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை லோக்மான்யா திலக் ரயில் நிலையம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.12164) 1.06.2026 முதல் 20.06.2026 வரை (தினமும்) மாலை 6.58 மணி முதல் 7 மணி வரை 2 நிமிடங்கள் நின்று செல்லும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம் வழித்தடத்தில் ( பராமரிப்புப் பணிகள் நடப்பதால், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 6 முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் கூடுதல் வசதியாக திருவள்ளூர் ரயில் நிலையத்திலும் தற்காலிகமாக 2 நிமிடங்கள் நின்று செல்லும் என்றுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரக்கோணத்தில் ரயில்கள் நிற்பதில் எந்த மாற்றமும் இருக்காது. திருவள்ளூர் பயணிகளுக்கு கூடுதலாக தற்காலிக நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications