10 வருஷமாக குவா குவா சத்தத்தையே கேட்டறியாத மதுரை கிராமம்..!
மதுரை: மதுரை பக்கம் ஒரு கிராமத்தில் கடந்த 10 வருடமாக ஒரு குழந்தை கூட பிரசவிக்கவில்லையாம்.. கேட்க ஆச்சரியமாக இருக்கிறதல்லவா.. ஆனால் மீனாட்சிபுரம் என்ற அந்தக் கிராமத்தில் போய் பார்த்தால் ஆச்சரியம் மேலும் பல மடங்கு அதிகரிக்கிறது.
சிறுமலையின் மீது இந்தக் கிராமம் அமைந்திருக்கிறது. இந்தக் கிராமத்தில்தான் இப்படி ஒரு நிலை.
கர்ப்பிணிப் பெண்களுக்கு 7வது மாதத்தில் வளைகாப்பை நடத்தி முடித்து விடுகின்றனர். பின்னர் அந்தப் பெண்ணை, அந்தப் பெண் மலையிலிருந்து கீழே கூட்டி கொண்டு போகப்படுகிறார். அங்கு போய் குழந்தை பெற்றுக் கொண்ட பின்னர்தான் கிராமத்திற்கு வர வேண்டுமாம்.

ஏன் இப்படி...?
இந்த வழக்கத்திற்கு பாரம்பரிய காரணமோ அல்லது வேறு மாய மந்திரமோ காரணம் இல்லையாம்.. கிராமத்தில் எந்த மருத்துவ வசதியும் இல்லை என்பதே இந்த பழக்கத்திற்குக் காரணமாம்.

சாலை கிடையாது
அவசர ஆத்திரத்திற்கு விரைந்து செல்வதற்கு நல்ல சாலை வசதி இந்த கிராமத்தில் கிடையாது.

அருமையான கிராமம்தான்... ஆனால்!
சிறுமலையின் மீது எழில் கொஞ்சும் வனப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த கிராமம் படு ரம்மியமாக இருக்கிறது. வெயிலை இவர்கள் அதிகம் பார்த்ததே கிடையாது. எப்போதுமே குளுமைதான்.. ஆனால் அடிப்படை வசதிகள்தான் படு மோசம்.

பிறந்து 10 வருஷமாச்சு
இந்தக் கிராமத்தில் கடந்த 10 வருடமாக எந்தக் குழந்தையும் பிறக்கவில்லையாம். பிரசவ வேதனை வந்து எந்தப் பெண்ணும் கதறி அழுததை இந்தக் கிராமத்து மக்கள் கடந்த 10 வருடமாக பார்த்ததில்லையாம். மருத்துவ வசதிகள் இல்லாததால் கர்ப்பிணிகளை 7வது மாதத்திலேயே கீழே கூட்டிக் கொண்டு போவதால் ஏற்பட்டுள்ள நிலை இது.

தாய் வீட்டில் பிரசவம் நடந்ததே இல்லை!
வழக்கமாக முதல் குழந்தையை தாய் வீட்டில் போய் பெற்றுக் கொள்வது தமிழகப் பெண்களின் பழக்கம். காலம் காலமாக இது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அப்படி ஒரு பழக்கத்தை இந்த ஊர்ப் பெண்கள் கடைப்பிடிக்க முடியாமல் வேதனையுடன் காலம் தள்ளிக் கொண்டுள்ளனராம்.

கச்சக்கட்டி போக வேண்டும்!
வாடிப்பட்டி அருகே உள்ள கச்சக்கட்டி என்ற ஊரில்தான் ஆரம்ப சுதாகார மையம் உள்ளது. இந்த கிராமத்து மருத்துவமனைக்குத்தான் மீனாட்சிபுரம் கர்ப்பிணிகள் வந்து பிள்ளை பெற்றுச் செல்கிறார்கள்.

கச்சகட்டி - வாடிப்பட்டியி்ல் வீடுகள் ரெடி
மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த அத்தனை பேருக்கும் கச்சக்கட்டி, வாடிப்பட்டி ஆகிய ஊர்களில் உறவினர்கள் வீடுகள் உள்ளனவாம். எனவே பிரசவத்திற்கு இந்த வீடுகள் ஏதாவது ஒன்றில் தங்கி பிரசவித்து பின்னர் தங்களது சொந்த ஊர் திரும்புவார்களாம். இல்லாவிட்டால் 2 மாதத்திற்கு வாடிப்பட்டியல் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கிக் கொள்வார்களாம்.
இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இப்படி நம்முடைய கிராமங்கள் அவல நிலையிலேயே இருக்கப் போகின்றனவோ...
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications