எல்லாம் அப்படி அப்படியே இருக்கிறது.. எதுவும் மாறலை... எச்.ராஜா
ஈரோடு: தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. எல்லாம் அப்படியேதான் உள்ளது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
ஈரோட்டுக்கு வந்த ராஜா அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், மோடி பிரதமர் ஆன பிறகு அனைத்து மாநிலங்களிலும் பாகுபாடின்றி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெட்ரோல் விலை குறைந்து உள்ளது. அண்டை நாடுகளுடன் மோடி நல்லுறவை வளர்த்து வருகிறார்.

அதே சமயம் காங். ஆட்சியில் அண்டை நாடுகளுடன் உறவுகளுக்கு எந்த கொள்கையையும் வகுத்து செயல்படவில்லை. இதனால் அண்டை நாடுகள் விரோதப் போக்கினை கடைபிடித்து வந்தன. ஆனால் இப்போது அண்டை நாடுகளுடன் உறவுகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசு, இந்தி, இந்து, இந்துதுவா கொள்கையினை செயல்படுத்தி வருவதாக ஒரு முன்னாள் அமைச்சர் கூறுகிறார். அவரது இந்த குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை பா.ஜ.க.வின் கோஷமும் அதுவல்ல. காங். ஆட்சியின்போது பல்வேறு ஊழல் வழக்குகள் நடந்துள்ளது. இதை மறைக்கவே பா.ஜ.க. அரசு மீது வீண் பழியை சுமத்தி வருகிறார்.
எங்கள் கூட்டணியிலிருந்து நாங்கள் யாரையும் வெளியே போக சொல்லமாட்டோம். கூட்டணி அப்படியேதான் உள்ளது.
மங்கள்யான் வெற்றிக்கு தி.மு.க. தலைவர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார். இது இயற்கையானது. கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற்றால் எப்படி அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறோம் அல்லவா... அதேபோல்தான் இதுவும் என்றார் அவர்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்











Click it and Unblock the Notifications