ரஜினியின் "போர்".. நன்றி சொல்லி இடத்தைக் காலி செய்த கமல்!
போர்க்களத்தில் சந்திக்கலாம் என்று ரஜினி சொன்னது பற்றி கமெண்ட் அடிக்க விரும்பவில்லை என்று கூறி கமல் செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டார்.
சென்னை: போர்க்களத்தில் சந்திக்கலாம் என்று ரசிகர்களிடம் ரஜினிகாந்த் கூறியது பற்றி கமெண்ட் அடிக்க விரும்ப வில்லை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் மிகவும் பிரசித்திபெற்ற நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அறிமுகமாகிறார் கமல்ஹாசன்.
இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் அவர் பல்வேறு அரசியல் கருத்துக்களையும் பேசினார்.

சம்பாதிக்கும் இடமல்ல அரசியல்
செய்தியாளர்களிடம் பேசிய கமல், போட்டி என்பது தப்பான வார்த்தை. அரசியல் என்பது சேவை என நினைக்கும் போது அதை சம்பாதிக்கக் கூடிய இடமாக நினைப்பது தவறு என நான் நினைக்கிறேன்.

ரஜின் ஒன்றும் புதிதாக சொல்லவில்லை
சிஸ்டம் சரியில்லை என்று எல்லோரும் சொல்வதைத்தான் ரஜினியும் சொல்லி இருக்கிறார். வித்தியாசமாக ஒன்றும் சொல்லவில்லை. தவறாகவும் சொல்லவில்லை.

தெரிந்தால் வர மாட்டேனா?
அரசியலுக்கு வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்தால் நான் வந்துவிட மாட்டேனா? அது தெரியாமல்தான் வரமாமல் இருக்கிறேன்.

அதுபற்றி என்னிடம் ஏன் கேட்கின்றீர்கள்
ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் ஆட்சி காலம் எப்படி இருந்தது என்று என்னிடம் ஏன் கேட்கின்றீர்கள்? அதுபற்றி எல்லாம் நான் நிறைய பேசிவிட்டேன்.

கலைஞர் வைரவிழா குறும்படம்
கலைஞர் வைரவிழா தொடர்பாக தனி குறும்படம் எடுத்துள்ளோம். அதனை எல்லோருக்கும் அனுப்பி இருக்கேன். விரைவில் வந்துடும் என்று கமல் ஹாசன் கூறினார்.

நோ கமெண்ட்
அப்போது, போர்க் களத்தில் சந்திக்கலாம் என்று ரஜினிகாந்த் கூறியது பற்றி கருத்து தெரிவிக்குமாறு செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதற்கு, ‘அது பற்றி கமெண்ட் அடிக்க விரும்பல.. நன்றி வணக்கம்" என்று சொல்லி கமல் அங்கிருந்து கிளம்பினார்.
-
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications