திமுகவில் ஒரு எம்.பிகூட இல்லை என்பதை முக.ஸ்டாலின் மறக்கக் கூடாது - டுவிட்டரில் எச்.ராஜா சாடல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக தமிழகத்திலிருந்து ஒரு எம்.பி யை பெற்றிருந்த போது, திமுகவில் ஒருவர் கூட எம்.பியாக இல்லை என்பதை ஸ்டாலின் மறக்கக் கூடாது என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

தமிழகத்தில் பாஜக காலூன்றும் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர்கள் அவ்வப்போது கூறிவருகின்றனர். இதை திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

 No DMK MPs in present Loksabha, says H.Raja

இதற்கு பதிலடி தரும் வகையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் திமுக ஒரு எம்.பியைக் கூட பெறாமல், ஜீரோவாக இருந்த போது தமிழக பாஜகவில் இருந்து ஒரு எம்.பி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் திமுகவில் ஒரு எம்.பிகூட வெற்றிபெறவில்லை. தமிழக பாஜகவில் இருந்து வெற்றிபெற்ற பொன்.ராதா கிருஷ்ணன், தற்போது இணை அமைச்சராக உள்ளார் என்பதையே எச்.ராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bjp leader H.Raja told in his twitter page that Stalin should not forget that dmk has no seat in Loksabha.
Please Wait while comments are loading...