தமிழகத்தைப் பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் வேண்டாம்... - சீமான் ஆவேசம்
நெடுவாசல்: நெடுவாசல் என்ற சோலைவனத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீமான் கோரியுள்ளார்.

நெடுவாசல் கிராமத்தினர் நடத்தும் போராட்டத்திற்கு நேரில் வந்து ஆதரவளித்த நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்றாமல் போனது இந்த தமிழக அரசு. எண்ணூர் கடலில் எண்ணெய் கொட்டியது. அதனை முறையாக எடுக்க முடியாமல் வாளியில் அள்ளிக் கொட்டியது அரசு.

நெடுவாசலில் ஒரு பிரச்சனை என்றால் இந்த அரசு எப்படி சமாளிக்கும். அந்த அச்சம் எங்களுக்கு இருக்கிறது.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பனை எடுப்பதன் மூலம் சோலைவனமான இந்த பூமி பாலைவனமாக மாறிவிடும். அரபு நாடுகளில் எண்ணெய் எடுக்கிறார்கள் என்றால் அது ஏற்கனவே பாலைவனமாக இருக்கிறது. ஆனால் இங்கு அப்படி இல்லை. அதனால் அதனை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க முடியாது. இதுதான் வளர்ச்சி என்றால் அப்படி ஒரு வளர்ச்சி எங்களுக்கு வேண்டாம்.

மக்களின் போராட்டத்திற்கும் உணர்விற்கும் மதிப்பளித்து உடனடியாக இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும். தமிழகம் முழுவதற்குமான பிரச்சனையாக இது உருவெடுத்துள்ளது. விவசாயத்தை அழித்துவிட்டு எண்ணெய்யை எடுத்து என்ன செய்யப் போகிறோம்,?" என்று கூறினார் சீமான்.

சீமான் வந்தபோது பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று அவரது பேச்சைக் கேட்டனர். சமீப நாட்களில் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் கூடாத கூட்டம் இது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications