நட்பு கூட்டணி காலம் மலையேறிவிட்டது... ஆட்சியில் பங்கு வேண்டும்... ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
சென்னை: நட்பு கூட்டணி என்ற காலம் எல்லாம் இப்போது முடிந்து விட்டது. ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடனே கூட்டணி சேருவோம் என்று தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த இளங்கோவன், இவ்வாறு கூறியுள்ளார்.
கூட்டணி அமைப்பது தொடர்பாக இப்போது எந்த நடவடிக்கையும் நாங்கள் ஆரம்பிக்கவில்லை என்றும் தேர்தல் நெருங்கும்போது, அப்போது உள்ள சூழ்நிலைக்கு தகுந்தவாறு, உரிய தேவைகளை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுப்போம் என்றும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

நிபந்தனை விதிப்போம்
எந்த நிபந்தனைகளும் இல்லாமல் சகோதரத்துவம் முறையில் கூட்டணிகளை ஏற்படுத்துவோம் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளது பற்றி கருத்து கூறியுள்ள இளங்கோவன், நாங்கள் இதில் தெளிவாக இருக்கிறோம். யாருடன் கூட்டணி அமைத்தாலும் நாங்கள் சில நிபந்தனைகளோடு தான் கூட்டணி சேருவோம்.

ஆட்சியில் பங்கு
கூட்டணி அரசில் பங்கு அளிக்கவேண்டும் என்பதும் ஒன்றாக இருக்கும். எங்களுடைய நிபந்தனையை ஏற்காத எந்த கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம்.

நட்புக்கூட்டணி
நட்பு கூட்டணி என்ற காலம் எல்லாம் இப்போது முடிந்து விட்டது. அதே நேரத்தில் மதசார்பின்மையை காப்பாற்றுவதற்காக நாங்கள் கைகொடுப்போம். மேலும் மது விலக்கை அமல்படுத்த சம்மதிக்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி சேருவோம்.

பாமக மனநிலை
சில நாட்களுக்கு முன்பு அன்புமணி அளித்த பேட்டியில் கூட்டணி கட்சிகளுடன் சில சமரசங்களை ஏற்படுத்திகொள்ள தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார். தேர்தல் நெருங்க நெருங்க அவர்களும் இறங்கி வருவார்கள். இதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.

முதல்வர் வேட்பாளர்
எல்லோருக்கும் முதல்வர் கனவுகாண உரிமை இருக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்பும், சூழ்நிலையும் இருக்கிறதா? என்பதை பார்க்கவேண்டும். காங்கிரசை பொருத்தவரை தேர்தலுக்கு முன்பு முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் பழக்கம் இல்லை.

விஜயகாந்த்தின் நிலை
விஜயகாந்த் பேசுவது சில நேரங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வை தீவிரமாக எதிர்ப்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது அவருடைய கட்சி உள் விவகாரமாகும். தே.மு.தி.க.வினால் நாங்கள் பலவீனமடையவில்லை. அடிமட்ட அளவில் நாங்கள் இப்போதும் வலுவாகவே இருக்கிறோம். மீண்டும் எழுச்சியுடன் திரும்ப வருவோம் என்று கூறியுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications