''சரக்கு வச்சிருக்கேன்.. இறக்கி வச்சிருக்கேன்.. அறுத்த கோழி மொளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்''
சென்னை: லோக்சபா தேர்தல் முடியும் வரை டாஸ்மாக் கடைகளில் எந்த வகையான சரக்கும் இல்லை என்று குடிகாரர்களுக்குக் கூறவே கூடாது என்று வாய் மொழி உத்தரவு போயுள்ளதாம். இதனால் குடிக்க வரும் குடிகாரர்களின் 'நலனை' முன்னிட்டு சரக்குகள் அளவுக்கு அதிகமாகவே இருப்பு வைக்கப்பட்டுள்ளதாம்.
தேர்தல் காலமான இந்த நேரத்தில் குடிக்க வருவோர் பெரும்பாலும் அரசியல் கட்சியினர் அல்லது அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்குப் போய் வருவோராவாக இருப்பதால் யாருடைய மனதும் சரக்கு இல்லாமல் 'புண்பட்டு புரையோடி'ப் போய் விடக் கூடாது என்ற 'நல்லெண்ணத்தில்' இப்படி ஒரு உத்தரவாம்.
எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் குடிமகன்கள் விரும்பும் சரக்கை தங்கு தடை இன்றி உடனே விற்பனை செய்ய வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.

ஆயிரக்கணக்கான... சியர்ஸ்!
தமிழகத்தில் தமிழக அரசுக்கு செந்தமாக டாஸ்மாக் கடைகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவைகள் செயல்பட்டு வருகின்றது. இந்த கடைகளில் பல ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

சரக்கு சப்ளை சரியில்லையே.. சியர்ஸ்!
கடந்த ஒரு வாரம் முன்பு வரை சில வகையான மது கிடைக்காத நிலை காணப்பட்டது. மேலும் அவர்கள் வைத்திருக்கும் சரக்கைத்தான் வாங்கி வாயில் ஊற்ற வேண்டிய 'அவல' நிலையும் இருந்ததாம்.

கேட்டது கிடைக்கலையே.. சியர்ஸ்!
கேட்ட சரக்கு கிடைக்கவில்லை என்ற புலம்பல் தமிழகம் முழுக்க எதிரொலித்தது.

எக்ஸ்ட்ரா 'நம்பர்' போடுறாங்களே.. சியர்ஸ்!
மேலும், பீர் -க்கு ரூ 10 ம், குவார்ட்டருக்கு ரூ 5 ம் , ஆப் -க்கு ரூ 10 ம் , புல்லுக்கு ரூ 20 ம் எம்.ஆர்.பி.ரேட்டைவிட அதிக விலைக்கு விற்பனை செய்தனர்.

பில்லு வரலையே.. சியர்ஸ்!
அவ்வாறு விற்கப்பட்ட எந்த சரக்குக்கும் கடை ஊழியர்கள் பில் கொடுப்பதில்லை. சரக்கு வாங்கும் குடிமகன்களும் பில் கேட்பதில்லை. கேட்கும் நிலையிலும் அவர்கள் இருந்ததில்லை.

நிறைய கொடுங்கப்பா.. சியர்ஸ்!
இந்த நிலையில், குடி மகன்கள் அதிகம் விரும்பும் பீர் மற்றும் பிராந்தி, விஸ்கி அயிட்டங்களை அதிக அளவு இறக்குமதி செய்து , அதிக விலைக்கு விற்பனை செய்யாமல், நியாயமான ரேட்டுக்கு விற்பனை செய்யக் கூறி டாஸ்மாக் உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு போட்டுள்ளார்களாம்.

தேர்தல் வந்துருச்சே.. சியர்ஸ்!
காரணம் என்னவென்று விசாரித்தால், விரைவில் தேர்தல் வருகின்றது. அப்போது கேட்ட சரக்கு கிடைக்கவில்லை என்றால், குடிமகன்கள் டாஸ்மாக் கடை மீதும் , அரசு மீதும் கோபம் கொள்ள நேரிடும் என்பதால் தான் இந்த பலே திட்டமாம்.
பிறகென்ன குடிகாரர்களே.. 'ஜே ஜே' வென்று ஆரவாரமாக கடைக்குப் போய் அள்ளி அள்ளிக் குடியுங்கள்.. நாடு 'வளம்' பெறும்.. வீடும் 'நலம்' பெறும்!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications