ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்காலிக மின்சார இணைப்பு வழங்க தமிழக அரசு மறுப்பு
ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்காலிக மின்சார இணைப்பு வழங்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
மதுரை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சார்பில் தற்காலிக மின்சார இணைப்பு வேண்டி தொடரப்பட்ட வழக்கில், மின் இணைப்பு கொடுக்க முடியாது என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டி மக்கள் நடத்திய போராட்டம் பெரிய அளவில் வெடித்தது. போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர்.

இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து,மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு ஆலைக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை சார்பில், மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், ஆலையில், ரசாயனப் பொருட்கள், எல்பிஜி, பெட்ரோல், டீசல் ஆகியன உள்ளன.
ரசாயன கிடங்கைப் பராமரிக்க தற்காலிக மின் இணைப்பு கொடுக்க வேண்டும்; இல்லையெனில் மிகப் பெரும் விபத்து ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து பதில் அளித்த தமிழக அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள், ஆலைக்கு ஜெனரேட்டர் வசதி செய்து கொடுத்துள்ளதால், மின் இணைப்பு கொடுக்க வேண்டியது இல்லை. இதுகுறித்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து 7 பேர் கொண்ட குழு அறிக்கை அளித்துள்ளது.
அறிக்கையின் அடிப்படையில் ரசாயனப் பொருட்கள் வெளியேற்றப்பட்டுள்ளன என்கிற வாதத்தை முன்வைத்தனர். இதனைக் கேட்ட நீதிபதிகள், வழக்கை ஜூலை 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications